[X] Close

பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் 34 பேர் கைது


34

  • kamadenu
  • Posted: 09 May, 2019 06:50 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக 34 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மீனவர்களை பாகிஸ்தான் கடலோர காவல் படையினர் நேற்று சுற்றி வளைத்து பிடித்தனர். பிறகு உள்ளூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த மீனவர்களின் 6 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பாகிஸ்தான் கடலோர காவல் படை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்த மீனவர்களை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மீனவர்களின் நீதிமன்றக் காவல் குறித்து நீதிபதி முடிவு செய்வார்” என்றார்.

கடந்த ஜனவரியில் குஜராத்தின் 5 மீனவர்கள் பாகிஸ்தான் கடலோர காவல் படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close