[X] Close

டிக்டாக் பாதுகாப்பு அம்சங்கள் மதிப்புள்ளவை


  • kamadenu
  • Posted: 08 May, 2019 17:44 pm
  • அ+ அ-

சென்ற வருடத்தில் இருந்து இளைஞர்கள் மத்தியில் டிக்டாக் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இதில் பலர் தங்களது நடிப்புத் திறனையும், நடனத் திறனையும் ஏன் இன்னும் சிலர் சில திரைப்படத்தின் வசனங்களுக்கு ஏற்றவாறு தங்கள் உதட்டசைவையும், சிலர் தங்களது செல்லப் பிராணிகளையும் வைத்து பங்கேற்றுள்ளனர். இதன் பயனாக பல பிரபலங்கள் தங்களது முயற்சிகள் மூலம் தங்கள் நடிப்புத் திறன்களை இளைய பார்வையாளர்கள் மத்தியில் சென்றடைந்தது.

ஆனால், கடந்த மாதத்தில் மதுரை உயர் நீதிமன்றம் இடைக்காலமாக டிக்டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்க வேண்டும் என்று அறிக்கையிட்டது. ஆபாசத்தை டிக்டாக் ஊக்குவிக்கின்றது என்ற காரணத்தினால் அதை நீக்க வேண்டும் என்று கூறியது. இதன்பேரில் ஏப்ரல் 24 ஆம் தேதி இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தைச் சென்றடைந்தது.

அங்கு ஒழுங்குமுறையில் விரும்பாத பொருட்டு தோல்வி அடைந்தது. அன்றே உயர் நீதிமன்றம் இடைக்கால நீக்கத்தை திரும்பப் பெற்றது. இதன் பொருட்டு டிக்டாக் சில பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்களை எந்த ஒரு தவறான சூழ்நிலைகளிலிருந்தும் காத்துக் கொள்ளலாம். மேலும் டிக்டாக் நிறுவனம், இதைத் தடை செய்தால் குடிமக்கள் தங்களது திறன்களை வெளிக்காட்டுவது குறையும் என நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது.

கூடுதலாக பிப்ரவரி மாதம் டிக்டாக் பாதுகாப்பு இணைய நாள் அன்று "Safe Hum Safe Internet (#SafeHumSafeInternet)" என்ற தலைப்பில் சைபர் வலைதள அமைப்புடன் கூட்டுச்சேர்ந்து பயனாளிகளுக்கு பாதுகாப்பான இணைய அனுபவத்தைக் கற்பித்தது. Better Me Better Internet (#BetterMeBetterInternet) என்கிற பிராச்சாரம் டிக்டாக் பயனாளிகளின் இணைய பாதுகாப்பிற்கு ஓர் முக்கிய பங்கு அளித்துள்ளது.

மேலும் டிக்டாக் தங்களது பயனாளிகளுக்கு தங்கள் இணைய பாதுகாப்பை மதிப்பிட ஆய்வாளர் பாதுகாப்பு வினாவிடை அமைத்துள்ளது. சுமார் 5 மில்லியன் மக்கள் இந்த வினாவிடை எடுத்துள்ளனர். இதனின் ஒரு பின்தொடரலாக டிக்டாக் இரண்டாவது வினாவிடையை வெளியிட்டுள்ளது. இதன் முலம் பயனாளிகள் தங்களது இணையப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளலாம். இந்த வினாவிடை டிக்டாக் இந்தியா, ஆசியா ,EMEA மற்றும் ஐரோப்பா முழுவதும் கிடைக்கும்.

பல பிரபலங்களும் தங்களின் ஆதரவைக் காட்டும் வகையில் இதில் பங்கேற்றுள்ளனர். மேலும் முக்கிய பிரபலங்கள் சிலர் அர்ஜூன் கானங்கொ, நேஹா காக்கர், ஷொலி செட்டிங், தமிழ் டெக்குருஜி ஆகியோர் இணைய பாதுகாப்பு குறித்து தங்களது ஆலோசனைகளைச் சிறிய வீடியோ பதிவுகளாக்கி அவற்றைப் பதிவு செய்து பகிர்ந்துள்ளனர். இதன் மூலம் சக பயனாளிகளும் பயன்பெறவும் அறிந்து கொள்ளவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் டிக்டாக் பயனர்கள் ஆப்பை பயன்படுத்தும் போதே தங்களை பாதுகாத்துக் கொள்ள இணைய மையம் அமைத்துள்ளது. இதில் 10 மொழிகளில் உள்ளது. அவை ஆங்கிலம்இந்திதமிழ்மராத்திபெங்காலிபஞ்சாபிகுஜராத்திஒரியாதெலுங்குகன்னடம் மற்றும் மலையாளம்.

டிக்டாக் ஆபாசத்தை முற்றுலும் தடுத்துள்ளது. மேலும், சமூக வழிகாட்டு முறைகளிலும், எதிர்ப்பு கொடுமைப்படுத்துதல் சாதனப் பக்கங்களை மேம்படுத்தியுள்ளது. மேலும் டிக்டாக் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் பயனாளிகளின் உள்ளடக்கத்தை ஸ்கேன் செய்து அதிக தோலை வெளிப்படுத்தியிருந்தால் அவற்றைப் பதிவு செய்ய தடைசெய்தும், அதேபோல் இந்த அறிக்கை ஒரே நபர் மூன்று முறை செய்தால் டிக்டாக் அந்த நபரின் கணக்கை நீக்கிவிடும். மேலும் டிக்டாக் வயது முரண்பாட்டு அம்சத்தை இதில் அமைத்துள்ளது. 13 வயது நிரம்பியவர்கள் மட்டும் இந்த ஆப்பை பயன்படுத்த வேண்டும் என்றுள்ளது.

மேலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் டிக்டாக்கில் செலவிடும் நேரத்தை குறைக்க ஸ்கிரீன் டைம் மேனேஜ்மன்ட் ஆப்ஷன் மூலம் சரிசெய்யலாம். 14 நாடுகளில் சுமார் 1.6 மில்லியன் பயனாளிகள் இதனை குறித்து வீடியோக்களை உருவாக்கியுள்ளனர். இதேபோன்று மலேசியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் நிகழ்வு நடந்துள்ளது.

இதனையொட்டி டிக்டாக் நிறுவனம் ஆப் குறித்து இந்தியாவில் ஒரு நேர்மறை சூழலை உருவாக்க சமூக வழிகாட்டுமுறைகளுக்கு முரண்பாடான சுமார் 6 மில்லியன் வீடியோக்களை நீக்கியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close