[X] Close

மேதைகளை வாசிப்போம்: கவிமணியின் வெள்ளைப்பசு; தூரனின் களஞ்சியப் புதையல்


  • kamadenu
  • Posted: 08 May, 2019 10:30 am
  • அ+ அ-

-ஆதி

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

குழந்தைகளுக்காகத் தமிழில் முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. 1901-ம் ஆண்டிலேயே குழந்தைகளுக்கு அவர் எழுதத் தொடங்கிவிட்டார். அவருடைய ‘மலரும் மாலையும்’ தொகுதியில் 25-க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்களும், 7 கதைப்பாடல்களும் இடம்பெற்றிருந்தன. ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு' இன்றளவும் பிரபலமான குழந்தைப் பாடல்.

தமிழாசிரியராகவும் பேராசிரியராகவும் பணியாற்றிய அவர், எளிமையும் சந்தமும் நிரம்பிய, குழந்தைகளே பாடக்கூடிய பல பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதிய காலம் முற்பட்டது என்பதால், தமிழ் சிறார் இலக்கியத்தில் அவருடைய பங்களிப்பு பெரிதாகக் கவனம் பெறாமலே போய்விட்டது. அதேநேரம், அனிமேஷன் படங்களாக வெளியாகியுள்ள தமிழ் சிறார் பாடல் தொகுதிகளில் அவருடைய சில பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அவருடைய குழந்தைகள் பாடல்களை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்:

https://bit.ly/2VfsWte

இயற்கை

வானம் கறுத்தால் மழை பெய்யும்,

மழை பெய்தால் மண் குளிரும்;

மண் குளிர்ந்தால் புல் தழைக்கும்,

புல் தழைத்தால் பசு மேயும்;

 

பசு மேய்ந்தால் பால் சுரக்கும்,

பால் சுரந்தால் கன்று குடிக்கும்;

கன்று குடித்து மிஞ்சியதைக்

கறந்து கொண்டு வந்திடலாம்!

காப்பியில் விட்டுக் குடித்திடலாம்.

-கவிமணி

குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்:

https://bit.ly/2Vjhc94

பெ. தூரன்

தமிழில் குழந்தைகளுக்கான முதல் கலைக்களஞ்சியத்தை முதன்மை ஆசிரியராகச் செயல்பட்டுத் தொகுத்தவர் பெ. தூரன் எனப்படும் பெரியசாமி தூரன். தமிழக அரசின் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ சார்பில் கலைக்களஞ்சியத்தின் பத்துத் தொகுதிகளையும், குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும் இவர் தொகுத்துள்ளார்.

கலைக்களஞ்சியத்துக்காகப் பெயர் பெற்றிருந்தாலும், அவர் ஒரு சிறந்த சிறார் எழுத்தாளர். தரங்கம்பாடி தங்கப் புதையல், சங்ககிரிக் கோட்டையின் மர்மம், கடக்கிட்டி முடக்கிட்டி உள்ளிட்ட கதைகள் - நெடுங்கதை, பாடல், அறிவியல் என 14 சிறார் நூல்களை எழுதியுள்ளார்.

 நேஷனல் புக் டிரஸ்ட்டின் 'பறவைகளைப் பார்' உள்ளிட்ட முக்கியமான சிறார் நூல்களை மொழிபெயர்த்தும் இருக்கிறார். பகத் சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பட்டப் படிப்பை பாதியில் கைவிட்ட அவர், கணித ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

குழந்தைகளுக்கான பெ. தூரனின் படைப்புகளையும் இணையத்தில் இலவசமாக வாசிக்கலாம்:

https://bit.ly/2VK5UKB

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close