[X] Close

கறுப்பு, கல்யாணம், கலகலப்பு


  • kamadenu
  • Posted: 07 May, 2019 12:04 pm
  • அ+ அ-

-கனி

ஸ்டாண்ட்-அப் காமெடியன்களின் காலம் இது. யூடியூப், ஃபேஸ்புக் எனச் சமூக ஊடகங்களில் இவர்களின் ஸ்டாண்ட்-அப் காமெடிக்கு  மாநில எல்லைகள் கடந்த வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆங்கிலம் மட்டுமல்லாமல், பிராந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் இப்போதைய ஸ்டாண்ட்-அப் காமெடியன்கள் உருவாகத் தொடங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் சாய்கிரண், ‘கறுப்புத் தோலும் கல்யாணமும்’ என்ற தலைப்பில் யூடியூப்பில் வெளியிட்ட வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது.

சிலருக்குக் கறுப்பு நிறத்தின் மீதிருக்கும் ஒவ்வாமையை எந்த மிகைப்படுத்தலும் இல்லாமல் இயல்பான நகைச்சுவை உணர்வுடன் இவர் விளக்கியிருக்கிறார். அத்துடன், கறுப்பாக இருக்கும் இளைஞர்கள் திருமணச் சந்தையில் எதிர்கொள்ளும் சவால்களையும் அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

மேட்ரிமோனி தளங்கள் செயல்படும் விதத்தையும் இவர் நையாண்டி செய்திருக்கிறார். இவர், தன் சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து நகைச்சுவை நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்வதால் இவரது ஸ்டாண்ட்-அப் காமெடி வீடியோ யூடியூப்பிலும் ஃபேஸ்புக்கிலும் லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கிறது.

தற்போது, ‘ப்யூர் வெஜ் ஜோக்ஸ்’ என்ற தலைப்பில் பல்வேறு நகரங்களில் இவருடைய ‘ஸ்டாண்ட்-அப் காமெடி ஷோ’ நடைபெற்றுவருகிறது.

‘கறுப்புத் தோலும் கல்யாணமும்’

காண இணையச் சுட்டி:

http://bit.ly/2PM5r59

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close