[X] Close

மாமல்லபுரம் அருகே சொகுசு விடுதியில் மதுவிருந்து: 7 பெண்கள் உட்பட 160 பேர் கைது 


7-160

  • kamadenu
  • Posted: 06 May, 2019 11:52 am
  • அ+ அ-

-கோ.கார்த்திக்

மாமல்லபுரம் அருகே தனியார் விடுதியில் உரிய அனுமதியின்றி மது விருந்தில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் நபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் என 7 பெண்கள் உட்பட 160 பேரை, போலீஸார் கைது செய்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சட்ட விரோதமாக மது விருந்து நடைபெறுவதாக, காவல்துறை உயர் அதிகாரிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ரகசிய தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட (பொறுப்பு) காவல் கண்காணிப்பாளர்  மற்றும் திருவள்ளூர் மாவட்ட எஸ்பியுமான பொன்னி தலைமையில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் காவலர்கள் உட்பட சுமார்  200-க்கும் மேற்பட்ட போலீஸார் ரிசார்ட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.  

இச்சோதனையில், ரிசார்ட்டில் உரிய அனுமதியின்றி மது விருந்து நடைபெற்றதும், இதில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மற்றும் ரிசார்ட்டுக்கு நேரில் வந்து பதிவு செய்து, தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் நபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் என 7 பெண்கள் உட்பட 160 பேர் கலந்துகொண்டது தெரிந்தது.  

இதையடுத்து, ரிசார்ட்டில்  மது விருந்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

மேலும், வேன் மூலம் மாமல்லபுரத்துக்கு அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபங்களில் அடைத்தனர். மேலும், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளான கைப்பை மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், மண்டபத்தில் அடைக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களது பெற்றோர்களை நேரில் வரவழைத்து எச்சரித்து அனுப்பினர்.

மேலும், சிலர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் மாமல்லபுரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close