[X] Close

13 வேரியன்ட்களில்  ஹுண்டாய் வென்யு


13

  • kamadenu
  • Posted: 06 May, 2019 11:35 am
  • அ+ அ-

முதலாவது நான்கு மீட்டர் எஸ்யுவி, புளூலிங்க் என்ற புதிய தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றுடன் வாகனச் சந்தையில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ஹுண்டாய் வென்யு இன்னும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதற்கு முன் ஹுண்டாய் வென்யுவில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன, அவற்றின் அம்சங்கள் என்னென்ன என்பதை ஹுண்டாய் வெளியிட்டுள்ளது.

நான்குவிதமான இன்ஜின்-கியர்பாக்ஸ்கள் ஹுண்டாய் வென்யுவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், மொத்தமாக 13 வேரியன்ட்களில் கிடைக்க உள்ளது. இதில் எட்டு பெட்ரோல் வேரியன்ட்கள் மற்ற ஐந்தும் டீசல் வேரியன்ட்கள்.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் விலை இருக்க வேண்டும் என்பதால் ஹூண்டாய் ஐ20 மாடலில் உள்ளது போலவே 83 ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது வென்யுவின் இ மற்றும் எஸ் ஆகிய பேஸ் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

120 ஹெச்பி மற்றும் 172 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.0 டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ள எஸ், எஸ் எக்ஸ், எஸ் எக்ஸ் ஓ ஆகிய வேரியன்ட்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் மற்றும் எஸ், எஸ் எக்ஸ்+  வேரியன்ட்களில் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் தரப்பட்டுள்ளன.

90ஹெச்பி மற்றும் 220 என் எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் இன்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இ, எஸ், எஸ் எக்ஸ் மற்றும் எஸ் எக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் வருகின்றன.

ஸ்டார் டஸ்ட், ஃபியரி ரெட், போலார் ஒயிட், டைபூன் சில்வர், டீப் ஃபாரஸ்ட், லாவா ஆரஞ்ச் மற்றும் டெனிம் ப்ளூ ஆகிய நிறங்களில் அனைத்து வேரியன்ட் வென்யு மாடல்களும் கிடைக்கின்றன.

டுயல் டோன் பெயின்டிங் ஆப்ஷன் மட்டும் 1.0 டர்போ பெட்ரோல் மற்றும் 1.4 டீசல் இன்ஜின்கள் உள்ள எஸ் எக்ஸ் வேரியன்ட்களில் மட்டுமே கிடைக்கின்றன. வென்யு அதன் வேரியன்ட்களின் அடிப்படையில் ரூ.8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஹுண்டாய் வென்யு, மாருதி விடாரா பிரஸ்ஸா, டாடா நெக்ஸான், ஃபோர்ட் ஈகோஸ்போர்ட், மஹிந்திரா எக்ஸ்யுவி 300 போன்றவற்றுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close