[X] Close

கள்ளழகர் மீது வேதிப்பொருள் கலந்த தண்ணீர் பீய்ச்சக் கூடாது பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் அறிவுரை


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 11:22 am
  • அ+ அ-

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது வேதிப்பொருள் கலந்த தண்ணீரை பீய்ச்சக் கூடாது என்று அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் துணை ஆணையர் செ.மாரிமுத்து தெரி வித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா 15-ம்தேதி (நேற்று ) தொடங்கியது. கோயிலில் இருந்து கள்ளழகர் வரும் 17-ம் தேதி மாலை 6 மணி அளவில் புறப்படுகிறார். மீண்டும் 23-ம் தேதி காலை 10.30 மணி அளவில் கோயிலுக்குத் திரும்புகிறார். கள்ளழகர் வரும் 19-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார். அப்போது ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சும் வைபவம் நடைபெறும்.

இதில், பக்தர்கள் தோல் பையில் தண்ணீர் சுமந்து சிறிய குழாய் மூலம் சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக் கடன் செலுத்துவது வழக்கம். பக்தர்கள் சில ஆண்டுகளாக தோல் பையில் விரத ஐதீகத்தை மீறி தண்ணீரில் திரவியம், வேதிப்பொருட்களைக் கலந்து செயற்கையான மற்றும் பிரஷர் பம்ப் பொருத்தி அடிப்பதால் சுவாமி, வாகனம், ஆபரணங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் பக்தர்கள், பட்டர்கள், பணி யாளர்கள் உடல் எரிச்சலுக்கு ஆளாகின்றனர். பற்களால் கடித்த தண்ணீர் பாக்கெட்டில் இருந்து கள்ளழகர் மீது பீய்ச்சுவதும் ஐதீகத்தை மீறும் செயலாகும்.

எனவே இத்திருவிழாவில் தண்ணீர் பீய்ச்சும் பக்தர்கள் பிரஷர் பம்ப், தண்ணீர் பாக்கெட் ஆகியவை மூலம் தண்ணீர் பீய்ச்சாமல், விரத ஐதீகத்தின்படி இயற்கையான தோல் பையில் சிறிய பைப் பொருத்தி திரவியம், வேதிப்பொருள் கலக்காத தண்ணீரை மட்டும் பீய்ச்ச வேண் டும் எனத் தெரிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close