[X] Close

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திருநங்கை பாரதி கண்ணம்மா போட்டியிட முடிவு


  • kamadenu
  • Posted: 16 Apr, 2019 11:18 am
  • அ+ அ-

மதுரையைச் சேர்ந்தவர் பாரதி கண்ணம்மா. இவர் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற 'மிஸ் கூவாகம்' அழகிப் போட்டியில் பார்வையாளராக கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

நான் கடந்த 2014ம் ஆண்டு மதுரை மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 1,232 வாக்குகள் பெற்றேன். இந்திய அளவில் தேர்தலில் போட்டியிட்ட முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றேன். தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மதுரையில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து திரும்பப் பெற்றுக் கொண்டேன்.

ஏனெனில் விரைவில் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளேன். அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் உள்ள தங்கத் தேர் 4 ஆண்டுகளாக இயங்கவில்லை. மீண்டும் தேரை இயக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும், அத்தொகுதி அடிப்படை பிரச்சினைகளை தேர்தல் வாக்குறுதியாக அளிக்க உள்ளேன் என்றார்.

இவரின் சொந்த பெயர் அழகு ராஜ். தற்போது மதுரை பாரத ஸ்டேட் வங்கியில் ஓய்வூதிய பிரிவில் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர், கடந்த 1996ம் ஆண்டு மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close