[X] Close

கோவை குற்றாலம் போலாமா?


kovai-kutralam-tour

  • வி.ராம்ஜி
  • Posted: 11 May, 2018 12:28 pm
  • அ+ அ-

நெல்லையில் அருவி இருக்கிறது. அதேபோல கோவையிலும் சின்னதான ஓர் அருவி அமைந்திருக்கிறது. நம்மூரில் அருவி என்றாலே எல்லோருக்கும் குற்றாலம்தான் நினைவுக்கு வரும். ஆகவே, கோவையின் அருவியை, கோவைக் குற்றாலம் என்கிறார்கள்.

சிறுவாணி ஆற்றில் இருந்து வரும் அருவி இது. கோயம்புத்தூரில் இருந்து 37 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அடர்ந்த வனப்பகுதியில், எந்த வாகன இரைச்சலும் இல்லாமல், அதேசமயம் பறவைகளின் சப்தங்களும் மரங்களின் நிழல்களும் படர்ந்திருக்கும் இடமாகத் திகழ்கிறது கோவை குற்றாலம். கோயம்புத்தூர் நம்மூர் மாதிரியில்லை. எப்போதுமே காலை 10 மணிக்கு வெயில் வந்து, சீக்கிரமாகவே, மாலை மூன்று மணிக்கெல்லாம் ஏரக்கட்டிவிடும். அப்படிப்பட்ட ஊரில் உள்ள இந்த அருவிப் பகுதிக்கு கேட்கவா வேண்டும்? ஏரியாவையே ஏஸியாக்கியது போல், எப்போதும் ஓர் குளுமை, விரவிக்கிடக்கிறது. உள்ளே நுழைந்ததும், உடல் மற்றும் மனதின் புழுக்கங்களும் காணாது போய்விடும்.

சற்றே உயரமான இடத்தில் இருந்து விழும் அருவி, கொள்ளை அழகு. அதில் குளித்தால் இன்னும் ஆனந்தம். எப்போதும் பறவைச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. குளிக்கும் இடம் கொஞ்சம் கரடுமுரடாக இருப்பதால், கவனத்துடன் நின்று குளிப்பதே உத்தமம்.

முழுக்க வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி இது. இன்னும் கொஞ்சம் வசதிகளைச் செய்து தரலாம் என்று புலம்புகிறார்கள் பொதுமக்கள். காலையில் உள்ளே நுழைந்துவிட்டு, அருவியில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு, அப்படியே மதியம் கிளம்பினால், பக்கத்தில் உள்ள பரம்பிக்குளம், ஆழியாறு, சோலையாறு, பாலாறு, ஆனமலை என பார்ப்பதற்கு நிறையவே இடங்கள் இருக்கின்றன.

ஒருநாள் ஒதுக்கினால், கோவை குற்றாலம் தொடங்கி, அப்படியே அருகில் உள்ள டூரிஸ்ட் ஸ்பாட்டுகளையும் பார்த்துவிட்டு, மனதை தக்கையாக்கிக் கொள்ளலாம்.

அருவியில் குளிக்கலாம்... ஆற்றையும் பார்க்கலாம். ஆனைமலையையும் ரசிக்கலாம்!

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close