[X] Close

தமிழகத்தில் 25 இடங்களில் கிடைத்த அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு


25

  • kamadenu
  • Posted: 13 Apr, 2019 08:07 am
  • அ+ அ-

தமிழகத்தில் அகழாய்வு நடைபெற்ற 25 இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்களின் வயதைக் கண்டறிய அப்பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் எனஉயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஆதிச்சநல்லூரில் 2004 பிப்ரவரியில் அகழாய்வு தொடங்கப்பட்டது. இங்கு 114 ஏக்கர் பரப்பளவில் இடுகாடு அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஏராளமான பழங்காலப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆதிச்சநல்லூரில் இதுவரை 4 கட்டங்களாக அகழாய்வு நடைபெற்றபோதிலும் இதுவரை அறிக்கை வெளியாகவில்லை. இங்கு கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்கள் சென்னையிலும் வெளிநாடுகளிலும் உள்ளன. எனவே, ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தவும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்காலப் பொருட்களைக் காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுசார்பில், ஆதிச்சநல்லூர் அகழாய்வின் அறிக்கை தயார் செய்ய 8 மாதம் அவகாசம் வேண்டும். அந்த அறிக்கை அடிப்படையில்தான் அடுத்தகட்ட அகழாய்வு தொடர்பாக முடிவெடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் 413 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் உள்ளன. இதில் 26 இடங்களில் மட்டுமே அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒரு அகழாய்வு தொடர்பாக மட்டும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 25 இடங்களில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருட்களை அதன் வயதைக் கண்டறிவதற்காக கார்பன் டேட்டிங் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

தமிழக தொல்லியல் துறையில் காலி பணியிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பாணையில் விண்ணப்பதாரர் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் கண்டெடுக்கப் பட்ட பொருட்களில் அதிகளவில்‘தமிழ் பிராமி’ எழுத்துகளேஉள்ளன. இதனால் தொல்லியல் துறைப் பணிக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டியதில்லை. இதனால் தொல்லியல் துறைப் பணியிடங்களுக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தமிழக அரசு நீக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close