[X] Close

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


12

  • kamadenu
  • Posted: 12 Apr, 2019 08:26 am
  • அ+ அ-

மேஷம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, அந்தஸ்து உயரும். அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: புது முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு.

மிதுனம்: விமர்சனங்களைக் கண்டு கலக்கமடைய வேண்டாம். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். அக்கம்பக்கத்தினரால் சில சங்கடங்கள் ஏற்படலாம்.

கடகம்: காரியங்களை பலமுறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். பழைய கடனைத் தீர்க்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்.

சிம்மம்: தவறு செய்பவர்களைத் துணிவுடன் தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும்.

கன்னி: எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

துலாம்: சிக்கலான பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல தகவல் வரும்.

விருச்சிகம்: புதிய முயற்சிகள் நீண்ட இழுபறிக்குப் பின்னர் முடியும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உடல் நலம் பாதிக்கக் கூடும். திடீர் பயணம் ஏற்படலாம்.

தனுசு: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நண்பர்கள் வட்டம் விரியும். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். பால்ய நண்பர் தக்க சமயத்தில் உதவுவார். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மகரம்: உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் இருந்த இழுபறி நிலை மாறும். வெளியூர் பயணத்தால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

கும்பம்: உங்களின் நிர்வாகத் திறமை, சாதுர்யம் வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதைக் கண்டறிவீர்கள்.

மீனம்: கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். விருந்தினர் வருகை உண்டு. கலைப்பொருட்கள் சேரும்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close