[X] Close

மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்: தருமபுரி பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு


  • kamadenu
  • Posted: 11 Apr, 2019 11:04 am
  • அ+ அ-

வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாக இது அமைய வேண்டும் என தருமபுரி மாவட்ட பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதி இடைத் தேர்தல் திமுக வேட்பாளர்கள் மணி, கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ஆதரவு கேட்டு நேற்று தருமபுரி மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். நடுப்பட்டி பகுதியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியது:பிரதமர் மோடியையும், முதல்வர் பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது. உடலில் வந்துள்ள 2 கட்டிகளை பார்த்து, ஆபத்தான கட்டிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று மருத்துவர் கூறினால், உடனே அகற்றி விட வேண்டும்.

8 வழிச் சாலை திட்டத்துக்காக விவசாயிகளின் நிலங்களை துன்புறுத்தி பிடுங்கினர். இந்த திட்டம் வேண்டாம், விவசாயி களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தான் சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டப் பேரவையில் நான் பேசினேன். இந்த திட்டம் தொடர்பாக விவசாயிகளிடம் முதல்வர் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினேன். தற்போது தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக அமைச்சர் ஒருவர் இது தொடர்பாக மேல் முறையீடுக்கு செல்வோம் என்கிறார். அக்கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாமக 8 வழிச் சாலையை எதிர்த்து வழக்கு தொடுத்தது. இப்போது, மேல் முறையீடு செய்வோம் என்று கூறும் அதிமுக-விடம் மேல் முறையீடு செய்ய வேண்டாம் என்று கூறும் தெம்பு பாமக-வுக்கு இருக்கிறதா? தேர்தலில் இவர்களுக்கு சரியான பாடம் தாருங்கள். திமுக வேட்பாளர்களுக்கு வெற்றியை தாருங்கள்.

இவ்வாறு பேசினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close