[X] Close

360: அரசியலில் குதித்த ‘நைன்டீஸ் கிட்’


360

  • kamadenu
  • Posted: 10 Apr, 2019 09:50 am
  • அ+ அ-

வாக்குகளாய் மாறுமா வேப்பம் பழம்?

அமேதி தொகுதியில் 2014-ல் ஸ்மிருதி இரானிக்காகத் தேர்தல் பணியாற்றிய பாஜகவின் விஷு மிஸ்ரா ‘அடுத்த முறை, அமேதி நமது’ என்ற முழக்கத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டுகிறார். 24 வயதாகும் மிஸ்ரா, அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். முன்பு தொகுதியில் ‘பாஜகவே கிடையாது’ என்ற நிலை. இருந்தாலும், 2009 மக்களவைத் தேர்தலில் 3.7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ராகுல் 2014-ல் ஒரு லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடிந்தது. அமேதியைக் கைப்பற்றும் பாஜகவின் தொலைநோக்குத் திட்டங்களால் கிராமப்புறப் பெண்கள் வேலைவாய்ப்பு பெற, பெண்களுக்குத் திருமணம் செய்து முடிக்க, வேப்பம் பழங்களைப் பறித்து வணிக நோக்கில் கிராமத்தவர் பயன்படுத்த என்று பல்வேறு உதவிகளை இத்தொகுதி பெற்றது. தற்போது மக்களிடத்தில் உருவாகியிருக்கும் பாஜக மீதான நல்ல அபிப்ராயத்தை வாக்குகளாக வென்றெடுக்கலாம் என்று முனைப்பு காட்டுகிறார்கள் மிஸ்ராவும் அவரது சகாக்களும். காங்கிரஸாரோ கையை அசைக்க முடியாது என்கிறார்கள்.

அரசியலில் குதித்த ‘நைன்டீஸ் கிட்’

1990-ல் பிறந்த நுஸ்ரத் ஜஹான் தனது இருபதாவது வயதில் திரையுலகில் அடியெடுத்துவைத்தார். வங்கக் கலை ரசிகர்களைக் கொஞ்ச காலத்திலேயே கட்டிப்போட்டவர் இப்போது வங்கத்தின் பஷிர்ஹாட் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். “எங்களோடு அவர் நேரடியாகப் பழகவில்லையென்றாலும் எங்கள் வீட்டு டிவியிலும் திரையரங்குகளிலும் அன்றாடம் பார்த்திருக்கிறோம். பெண்களின் பாதுகாப்பு குறித்தும் பெண் குழந்தைகளின் கல்வி குறித்தும் உரிமையோடு அவரிடம் கேட்போம்” என்கிறார்கள் பொதுமக்கள். சுமார் ஒன்றரை கோடிப் பேர் இவரது பேஸ்புக் பக்கத்தைப் பின்தொடர்கிறார்கள்!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close