[X] Close

கள நிலவரம்: ஸ்ரீபெரும்புதூர் தொகுதி யாருக்கு?


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 10:14 am
  • அ+ அ-

தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தங்கிப் பணியாற்றும் தொகுதி ஸ்ரீபெரும்புதூர்.

நீண்டகாலமாக ரிசர்வ் தொகுதியாக இருந்த இந்தத் தொகுதி, மறுசீரமைப்புக்குப் பிறகு பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மரகதம் சந்திரசேகர் உட்பட அதிகமுறை பெண்கள் இங்கு களம் கண்டுள்ளனர். மரகதம் சந்திரசேகர் 3 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

2019- மக்களவைத் தேர்தலில் அ.வைத்திலிங்கம் (பாமக), டி. ஆர் பாலு (திமுக), ஜி தாம்பரம் நாராயணன் (அமமுக), சிவகுமார் (மநீதி), மகேந்திரன் (நாம் தமிழர்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் பாமக வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கும்தான் போட்டி.  அதிமுக கடந்த முறை வென்ற தொகுதி என்பதால் அந்த வாக்குகள் பாமகவுக்கு அப்படியே கிடைக்கும் என்று கணக்குப் போட்டு அதிமுகவும், பாமகவும் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் எந்த சுணக்கமும் காட்டாமல் திமுகவினர் அனல் பறக்க வேலை பார்த்து வருகின்றனர். பிரச்சாரத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

டி.ஆர்.பாலுவுக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close