[X] Close

கள நிலவரம்: வடசென்னை தொகுதி யாருக்கு?


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 09:41 am
  • அ+ அ-

வடசென்னை தொகுதி பெரும்பாலும் திமுக,  அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற தொகுதி. கடந்த முறை மும்முனைப் போட்டியில் அதிமுக வென்றது. இம்முறை திமுக நேரடியாக வேட்பாளரை நிறுத்தி உள்ள நிலையில் அதிமுக, கூட்டணி கட்சியான தேமுதிகவிற்கு தொகுதியை ஒதுக்கியுள்ளது.

அதேநேரம் டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளரும் போட்டியில் வேகமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி மகன் டாக்டர் கலாநிதி போட்டியிடுகிறார் இத்தொகுதியில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் புதியவர்கள் என்பதால் பிரச்சாரத்தில் யார் முந்துகிறார்களோ?  தொகுதியில் எந்தக் கட்சி அதிக வாக்குகளை வைத்துள்ளதோ? அவரே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்பது கள நிலவரம்.

அதிமுக கூட்டணியில் ஆர்.கே.நகர் உள்ளிட்ட தொகுதிகளில் அமமுக பலமாக உள்ளது. அதிமுக வாக்குகளை அமமுக இங்கு அதிக அளவில் பிரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.கே நகர்  தொகுதியில் ஏற்கெனவே அதிக வாக்குகளை டிடிவி தினகரன் பெற்றுள்ளதால் இத்தொகுதியில் டிடிவி தினகரன் கடுமையான பாதிப்பை அதிமுக கூட்டணிக்கு கொடுக்கலாம்.

அதிமுக கூட்டணியின் வேட்பாளர் உள்ளூர்க்காரராக இல்லாததும் பலவீனமாகப் பார்க்கப்படுகிறது. திமுகவுக்குள் உட்கட்சிப் பிரச்சினைகள் இருந்தாலும் சென்னையில் திமுக வெல்லும் தொகுதியில் இதுவும் ஒன்று என்பதே தற்போதைய நிலை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close