[X] Close

கள நிலவரம்: சிவகங்கை தொகுதி யாருக்கு?


  • kamadenu
  • Posted: 09 Apr, 2019 09:32 am
  • அ+ அ-

சிவகங்கை தொகுதியில் திருப்பத்தூர், காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 பேரவைத் தொகுதிகள் உள்ளன. பாஜக வேட்பாளர் எச். ராஜா முழுமையாக அதிமுகவை நம்பியே களம் இறங்கி உள்ளார்.

சிவகங்கை, காரைக்குடி தொகுதிகளில் அதிமுகவில் முக்குலத்தோர் வாக்குகளைப் பிரிக்க அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி முயற்சித்து வருகிறார். இது எச். ராஜாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் களம் இறங்கியிருப்பதன் மூலம் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது. சீட் கொடுக்காத அதிருப்தியில் இருந்த சுதர்சன நாச்சியப்பனும் மவுனம் ஆகிவிட்ட நிலையில் கார்த்தி சிதம்பரத்துக்காக காங்கிரஸும், திமுகவும் மிகக் கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கின்றன.  கார்த்தி சிதம்பரத்தின் மீதான வழக்குகள், குற்றச்சாட்டுகள் எதுவும் அவர் வாக்கு வங்கியைப் பாதிக்காது என்றும் சொல்லப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் சினேகன் போட்டியிடுகிறார். ஆனால், அவர் சிவகங்கை தொகுதி மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தமாட்டார் என்று கணிக்கப்படுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close