[X] Close

பொன்மலை வெண்ணெய் பன்! கந்தகபூமியில் ஜில் ஸ்பெஷல்!  


ponmalai-vennai-bun-rly-shop

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Apr, 2018 15:20 pm
  • அ+ அ-

கந்தகபூமி என்று சொல்லப்படும் திருச்சியில்... சென்னை ஐசிஎப்க்கு இணையாக பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப் உள்ளது.  பொன்மலை வெண்ணெய் பன்னுக்கு, அந்தப் பகுதியில் எப்பவுமே தனி மவுசு உண்டு.

சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாகவோ அல்லது தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாகவோ வரும்போது பொன்மலை ரயில்வே ஸ்டேஷன் இருக்கும். இதையொட்டி, மிகப்பிரமாண்டமான ரயில்வே ஒர்க் ஷாப் இருக்கிறது.

மூன்று ஆள் உயரத்துக்கு கருங்கல் சுவர் எழுப்பப்பட்ட இந்த ஒர்க்‌ஷாப்பிற்கு, நாலாபுறமும் வாசல்கள் உண்டு. நார்த் டி கேட், சி டைப் கேட், ரயில்வே சினிமா கேட், ஆர்மரி கேட் என நான்கு கேட்டுகள் உள்ளன. சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இந்த ரயில்வே ஒர்க் ஷாப்பில், ஆர்மரிகேட் என்பதுதான் மெயின் கேட்.  மாலை வரை மற்ற கேட்டுகள் திறந்திருக்கும். பிறகு ஆர்மரி கேட் எனும் மெயின் கேட் வழியாகத்தான், ஊழியர்கள் வரலாம்; செல்லலாம்.

அந்தக் காலத்தில், இன்னும் நிறைய ரயில்வே ஊழியர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு மூன்று விதமான ஷிப்ட் இருக்கும்.  மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 2 மணிக்கு வருகிறவர்களுக்காகவே, ஒரு டீக்கடை திறந்திருக்கும். அருணா பால் டிப்போ எனும் கடைக்கு இப்போது 49 வயது.

’’ஆரம்பத்துல டீக்கடைதான் வெச்சிருந்தாங்க. ஆனா ராத்திரி கண்முழிச்சு வேலை பாத்துக்கிட்டு வரும்போது, கொஞ்சம் உடம்பு சூட்டை குறைக்கிற விதமாவும் பசியைப் போக்கற விதமாவும்  இருக்கட்டுமேன்னு வெண்ணெய் பன் விற்பனையைத் தொடங்கினாங்க. ஆரம்பத்துல பன், பிஸ்கட்டெல்லாம் வெளியே வாங்கினோம். அப்புறம் சொந்தமா பேக்கரி போட்டு தயாரிக்க ஆரம்பிச்சிட்டோம்.

அதேபோல, ஊத்துக்குளிலேருந்து வெண்ணெய் வாங்க ஆரம்பிச்சு, இத்தனை வருஷமாவும் அங்கிருந்து வரவழைச்சு கொடுத்துக்கிட்டிருக்கோம். வெண்ணெய் பன், சாப்பிட்ட கொஞ்ச நேரத்துலயே கண்ணுல இருக்கிற சூடு குறையும். ஜில்லுன்னு குளிர்ச்சி பரவும்னு அனுபவிச்சவங்க சொல்லிருக்காங்க’’ என்கிறார்  ரஜினிகாந்த். இவரின்  தந்தைதான் அந்தக்  காலத்தில் கடையைத் தொடங்கியிருக்கிறார்.

ரயில்வே ஊழியர்கள், ரயில்வே ஒர்க் ஷாப், சுற்றிலும் ரயில்வே காலனிகள் என்றிருந்த நிலை இப்போது மாறிவிட்டது. ஒர்க்‌ஷாப் உண்டு. ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரயில்வே குவார்ட்டர்ஸ் 90 சதவிகிதம்  புதர்க்காடுகளாகிவிட்டன. அருகருகில் உள்ள ஏரியாக்களில் வீடு வாங்கிக்கொண்டோ, வாடகை வீட்டிலோ இருந்தபடி பொன்மலை வாரச் சந்தைக்கு அருகில் உள்ள அருணா பால் டிப்போவையும் வெண்ணெய் பன்னையும் மறக்காமல் வந்து சாப்பிட்டுச்  செல்கிறார்கள்.

‘எங்க அப்பா ரயில்வே எம்ப்ளாயி. அப்ப நாங்க குவார்ட்டர்ஸ்லதான் இருந்தோம். அப்பா ரிடையர்டாகி, இறந்தும்போயிட்டார். நானும் வேலை விஷயமா, சென்னைக்கு வந்தாச்சு. ஆனாலும் எப்ப திருச்சி வந்தாலும் , பசங்களுக்கு வெண்ணெய் பன் வாங்கிக் கொடுத்துடுவேன். எங்க அப்பாவை சைக்கிள்ல கூப்புடுறதுக்கு வந்தா, வெண்ணெய் பன் கிடைக்கும்னு  சைக்கிள் மிதிச்சு அப்பாவை க் கூட்டிட்டுப் போனதையும் ஜில்லுன்னு வழுக்கிட்டு வாய்க்குள்ளே நுழைஞ்ச வெண்ணெய் பன்னையும் மறக்கவே முடியாது.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் பால் பன் பிரபலம் போல், இந்தப் பகுதியில் வெண்ணெய் பன் ரொம்பவே பிரசித்தம்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close