[X] Close

கடந்த காலங்களில் சொன்னதை செய்திருக்கிறோம்: செஞ்சி, திண்டிவனம் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 07:21 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

ரம்யா கிருஷ்ணனோட முதல் படமான ‘வெள்ளை மனசு’ படத்துல, அவருக்கு ஹீரோ நான்தான்’ என்று ‘வெள்ளை மனசு’ அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் ஒய்.ஜி.மகேந்திரன்.

1983ம் ஆண்டு, மார்ச் மாதம் 15ம் தேதி வெளியான ‘வெள்ளை மனசு’ படத்தில்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் அறிமுகமானார். சித்ராலயா கோபு இயக்கிய இந்தப் படத்தை பிலிம்கோ நிறுவனம் தயாரித்தது.

இந்தப் படத்தில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஹீரோவாக நடித்தார். அவருக்கு ஜோடியாக, மனைவியாக ரம்யா கிருஷ்ணன் அறிமுகமானார்.

இதுகுறித்து ஒய்.ஜி. மகேந்திரன் நம்மிடம் பகிர்ந்துகொண்டு பலவிஷயங்கள் குறித்துப் பேசினார்.

சித்ராலயா கோபு சார், இந்தப் படத்தின் கதையைச் சொல்லி, என்னை நடிக்கவும் ஒப்பந்தம் செய்தார். ‘இந்தப் படத்துல ஹீரோயின், ஒரு இன்னசெண்ட். குடும்பம், தாம்பத்யம், செக்ஸ்னா என்னன்னே தெரியாத பொண்ணு. அதனால, ஒரு சின்னப் பொண்ணா, பளிச்சுன்னு இருக்கறா மாதிரி, பொண்ணு இருந்தா சொல்லு’ன்னு சொன்னார்.

கேமிராமேன் பாபுவோட பிரதர் நல்ல போட்டோகிராபர். அவருக்கும் ரம்யா கிருஷ்ணன் பேமிலிக்கும் நல்ல பழக்கம் உண்டு. ஒருநாள், அவர் எடுத்த போட்டோஸையெல்லாம் பாத்துக்கிட்டிருந்தப்ப, ரம்யா கிருஷ்ணனோட போட்டோவும் அதுல இருந்துச்சு. ஒல்லியா, கண்ணு மட்டும் பெருசா, ரொம்ப ரொம்ப சின்னப் பொண்ணா இருந்தாங்க.

அப்புறம் நேர்ல போய்ப் பாத்தேன். அப்பதான் சோ சாரோட அக்கா பொண்ணுன்னு தெரிஞ்சுச்சு. அப்புறம் கோபு சார்கிட்ட கூட்டிட்டுப் போனேன். அவரும் ஓகே சொல்லிட்டாரு.

அப்பலாம், ரம்யா கிருஷ்ணன் ரொம்பவே ‘ஷை’ டைப். அதாவது கூச்ச சுபாவம் ஜாஸ்தி. ஆனா அவங்க பின்னாடி, கிளாமர் ரோல்ல கலக்கியெடுத்தாங்க. ஆச்சரியமா இருந்துச்சு. ஆனா அடுத்தகட்டமா, அதுலேருந்து ஒரு ‘யு டர்ன்’ அடிச்சு, கேரக்டர் ரோல்ல பின்னிட்டிருக்காங்க. அதுக்கு ‘பாகுபலி’ ஒண்ணு போதுமே உதாரணத்துக்கு.

இதுல ஒரு காமெடி... வெள்ளை மனசு படத்துல ரம்யா கிருஷ்ணன் எனக்கு மனைவி. ஆனா, செட்ல, ஷூட்டிங் ஸ்பாட்ல, என்னை அங்கிள் அங்கிள்னு வாய்க்கு வாய், வார்த்தைக்கு வார்த்தை கூப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்.

இவ்வாறு ‘வெள்ளை மனசு’ படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் நடித்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் ஒய்.ஜி.மகேந்திரன்.

 

 

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close