[X] Close

தேமுதிக பிரமுகர் கொலை வழக்கு; நீதிமன்றத்தில் உறவினர் சரணடைந்தார்: சொத்து தகராறில் கொல்லப்பட்டது அம்பலம்


  • kamadenu
  • Posted: 30 Mar, 2019 07:11 am
  • அ+ அ-

ஜெமினி தனா

நீங்கள் வாங்கும் மதிப்பெண்கள்தான்  உங்கள் வாழ்க்கையைத்  தீர்மானிக்கின்றன. அதனால் தேர்ச்சி பெறுவது முக்கியம். அதைவிட மதிப்பெண் அதிகம் பெறுவதுதான் மிக மிக முக்கியம்  என்று குழந்தைகளைப் பாடாய்படுத்தும் பெற்றோர்களே இங்கு மெஜாரிட்டி.

பள்ளிப் பாடமெல்லாம் இருக்கட்டும். வாழ்க்கைப் பாடத்தில் நீங்கள் எவ்வளவு மதிப்பெண்  வாங்கியிருக்கிறீர்கள்... பாஸ் பண்ணியிருக்கிறீர்களா? எவ்வளவு மார்க்?

‘என்னது லைஃப்ல பாஸ், மார்க்குன்னு ஏதேதோ கேக்கறீங்களே?’ என்கிறீர்களா?

ஆமாம். இந்த வாழ்க்கையில், உங்களுக்கான பரிட்சையில், உங்களுடைய மார்க் என்ன. இதிலொரு சுவாரஸ்யம்... உங்களுக்கு நீங்களே மார்க் போட்டுக்கொள்ளப் போகிறீர்கள்.

மறந்தே போச்சு!

   ஒவ்வொரு தருணத்திலும் நாம் செய்யும் செயல்களை ஆராய்ந்து பார்ப்பதே இல்லை நாம். அதற்கு நேரமில்லாமல் அடுத்த வேலையை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். முதலில் நாம் செய்த வேலைக்கு பாஸ்மார்க் வாங்கியிருந்தால் தான், அடுத்த வேலையை சிறப்பாகச் செய்யமுடியும். அடுத்தடுத்த வேலைகளில் இன்னும் செம்மையாக செயலாற்றுவீர்கள்.

’நானே ஒரு செயலைச்செய்துவிட்டு, அதற்கு நானே மார்க்கும் போடணுமா? ஏன் வெளியாள் யாரும் போடக்கூடாதா?’ என்று கேட்கிறீர்களா?

 இப்போது ஸ்டைலாகச் சொல்லுகிறோம். ஆனால், நம் எதிரில் உள்ளவர்கள் சாதாரணமாகச் சொல்லும் நியாயமான குறைகளைக் கூட, ஈகோ உள்ளிட்ட பல காரணங்களால், ஏற்றுக்கொள்வதே இல்லையே!  அதனால் ஒவ்வொரு விஷயத்திலும் நாம் சரியாக இருக்கிறோமோ, சரியாக  செய்திருக்கிறோமா என்று உங்க ளுக்கு நீங்களே டிக் செய்து  மார்க் போடுங்கள். அடிப்படையான விஷயங்கள்  மட்டும் கொடுத்திருக்கிறோம். எதெல்லாம் பாஸ்மார்க்... எதிலெல்லாம் பாஸ்மார்க் என்பதைக்  குறித்துக்கொண்டே வாருங்கள்..

விடிஞ்சாச்சு!

 அதிகாலையில்  எழுந்து சூரியபகவானுக்கு ஒரு சலாம் போட்டப்படி சூரிய நமஸ்காரம்,  யோகா,  சிறிய உடற்பயிற்சியுடன் கூடிய நடை பயிற்சி, அதன்பிறகே அன்றாட பணி என இருப்பவர்கள் மனதையும் உடலையும் கச்சிதமாக வைத்திருப்பார்கள் என்பது காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. நீங்கள் இவற்றில் ஒன்றையாவது கடைப்பிடிக்கிறீர்களா?

ஆஹா.. அப்படியெனில், உங்களுக்கு ஒரு ஷொட்டு. நீங்கள்  பாஸ்மார்க் வாங்கிவிட்டீர்கள். ஒருநாளின் ஆரம்பத்தை, ஆரோக்கியத்துடனும் அமைதியுடனும் உடற்பயிற்சியுடனும் தொடங்குவது நல்ல விஷயம்.

’அட நீங்க வேற. காலைலயாவது... சீக்கிரமே எந்திரிக்கிறதாவது. வாக்கிங் ஜாக்கிங் போறதாவது’ என்பவரா நீங்கள். உங்களுக்கு ஷொட்டு நோ. நறுக்குன்னு நாலு குட்டு.

ஆயில் இல்லேன்னா ஆயுள்!

  காலையில் வெறும் வயிற்றில்  ஒரு தம்ளர் தண்ணீர். எண்ணெய் இல்லாத உணவு வகைகள், அசைவ உணவு என்பது வாரம் ஒருமுறை இல்லையெனில் மாதம் இரு முறை  எடுத்துக்கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்... அன்றாடம் காய்கறிகள், தினம் ஒரு பழவகை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும்  உணவை உமிழ்நீருடன் மென்று கலந்து சாப்பிட்டால் நீரிழிவு நோய் கூட வராது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

கண்களுக்கு விருந்தளிக்கும் பீட்ஸாவும், பர்கரும், குளிர்பானங்களும் தவிர்த்துவிட்டு, காலத்துக்கேற்ப சூப், பழச்சாறு, நீர் மோர்  என்று ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில் கவனம் செலுத்துபவர்கள் ஹை-பை அடித்துக்கொள்ளுங்கள்..   குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இப்படி பழக்கிவைத்திருக்கும் இல்லத்தரசிகளாகவோ குடும்பத்தலைவனாகவோ இருந்தால் உங்களுக்கு மலர் கிரீடத்துடன் முதலிடம்.

 டைம் மேனேஜ்மென்ட்:

    9 மணிக்கு ஒருவரைச் சந்திக்க அனுமதி கேட்டிருப்போம். 10 நிமிடங்கள் முன் கூட்டியே  அவரைப் பார்க்க செல்பவர்களும் உண்டு.  9 மணிக்குத்தான்  வீட்டிலிருந்தே கிளம்புபவர்களும் உண்டு. ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது என்று சொல்வார்கள். பள்ளிக் காலத்திலிருந்தே  குழந்தைகளை வலியுறுத்தக்கூடிய  முக்கிய விஷயம் டைம் ஃபாலோயிங்…. எல்லா இடங்களிலும் இதைப் பொருத்தி பார்த்துக்கொள்ளுங்கள். உரிய காலங்களில் உரிய நேரத்தில் ஆஃபீஸ் செல்வதிலிருந்து, எல்.ஐ.சி. பாலிஸி, வீட்டு வரி, இன்ஷ்யூரன்ஸ், கரண்ட் பில், ஸ்கூல் ஃபீஸ், மருத்துவ பரிசோதனை, எல்லாமே நேரம் தவறாமல் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டான ஸ்வீட் ஹெட் மாஸ்டர்தான். டைம் ஃபாலோவைத் தவறாமல் ஃபாலோ செய்வதில் உங்களுக்கான மதிப்பெண்களை நீங்கள் தான் போட்டுக்கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில்...

  இரண்டாவது மாடியில் ஆபீஸ். லிஃப்ட்டுக்காக காத்திருக்காமல் படிகளில் ஏறுபவரா நீங்கள். உங்கள் இளமை காக்கப்படும் என்கிறார்கள் உடற்பயிற்சி வல்லுநர்கள்.  அலுவலகத்தில் தேவையற்ற பேச்சு, குடும்பத்தில் நடக்கும் குழப்பங்கள்,  வீண் வம்பு, அடுத்தவர்களது வேலையில் குறுக்கீடு, எல்லாம் சுவற்றில் அடித்த பந்துபோல் திரும்பி நம்மையே தாக்கிவிடும் என்பதால் வேலையில் எப்போதும் ஒருவித கவனம் இருக்க வேண்டும் என்பது அனுபவஸ்தர்களின் அட்வைஸ்.

  இரண்டு பேர் இருக்கும் வரை பிரச்சினை இல்லை. மூன்றாவதாக ஒருவர் மூக்கை நுழைத்தால், அங்கே ஈகோ தலைதூக்குவது சகஜம்தான். நான் உண்டு என் வேலை உண்டு என்று குறித்த நேரத்தில் வேலையைக் கச்சிதமாக முடிப்பவர்கள் எத்தகைய பணிச்சுமையையும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள்.. சிக்கலான காலங்களிலும் எத்தனை முறை வீழ்ந்தாலும் எழுந்துதானே ஆகவேண்டும் என்ற மன உறுதியும் அடைந்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள்  என்கிறார்கள் உளவியலாளர்கள்

ஆண் பெண் இருவருக்குமே பொருந்தும் மேற்கண்ட செயல்களில் நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள். உங்களுக்கான மதிப்பெண்கள் என்ன என்பதை நீங்களே டிக் செய்யுங்கள்.

அன்பே அன்பு!

 சின்னச் சின்ன வேலைகளைச் செய்யும் குழந்தைகளுக்கு கொஞ்சல் ப்ளஸ் கறார். ரெண்டுமே ரெண்டு கண்கள்தான்.

100 க்கு 40 மார்க் வாங்கியிருந்தாலும் அதனாலென்ன செல்லம்  அடுத்த முறை சேர்த்து வாங்குங்க.. என்று சொல்பவரா நீங்கள். ஆஹா... உங்க குழந்தைகள் 40 மார்க். அவர்களை ட்ரீட் பண்ணிய விதத்தில், டபுள் மார்க் உங்களுக்கு!

பலரும் மனைவியை நேசிக்கிறவர்கள்தான். ஆனால் பாராட்டுகிறோமா? (இது, மனைவியருக்கும் பொருந்தும்).

’இன்னிக்கி வெந்தயக் குழம்பு சூப்பர்மா. ஆபீஸ்ல சூப்பர்சூப்பர்னு சொல்லி, வாங்கிச் சாப்பிட்டாங்க’ என்று வாய்நிறைய, மனம் விட்டு பாராட்டியிருக்கிறீர்களா?

‘உங்களுக்கே ஏகப்பட்ட வேலை ஆபீஸ்ல. இதுல மார்க்கெட் போய், காய்கறி வாங்கிட்டு வந்து, சாயந்திரம், மிக்ஸியை ரிப்பேருக்குக் கொடுத்ததை வாங்கிட்டு வந்துன்னு கூடுதல் அலைச்சல். காலைல அவசரம் அவசரமா கிளம்பிப் போனீங்களே... பாக்கவே பாவமா இருந்துச்சுங்க’ என்று மனைவிமார்கள், கணவனிடம் சொன்னதுண்டா?

கணவன் மனைவி என்றில்லை. மாமியார் மருமகளாக இருக்கலாம். அக்கா தம்பியாக, அண்ணன் தங்கையாக, நாத்தனார் கொழுந்தியாளாக, சித்தப்பா பெரியப்பாவாக, நண்பர்களாக, அக்கம்பக்கத்தாராக, அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். எல்லோருமே பாராட்டுக்குத்தானே ஏங்கிக்கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் செய்பவராக இருந்தால், நூற்றுக்கு நூறு மார்க் போட்டுக்கொள்ளுங்கள்.

செய்யவில்லையெனில், ‘முட்டை’ போட்டுக்கொண்டு முழிக்காதீர்கள். இப்படியெல்லாம் செயலாற்ற இனியாவது முனைந்திடுங்கள்.

’இனிமே, இப்படிலாம் இருக்கப்போறேம்பா’ என்று உங்களுக்கு நீங்களே சொல்ல ஆரம்பிக்கும்போதே, நீங்கள் பாஸ் பண்ணுவதற்கு தயாராகிவிட்டீர்கள். கொடுங்க கையை. கங்கிராட்ஸ்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close