[X] Close

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை கோரி சைக்கிளில் விவசாயி பிரச்சாரம்


voting

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரி புதுக்கோட்டையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட விவசாயி ரத்தினம்.

  • kamadenu
  • Posted: 11 Mar, 2019 08:28 am
  • அ+ அ-

தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டு முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மேலமஞ்சு விடுதியைச் சேர்ந்தவர் ரத்தினம்(50). விவசாயியான இவர், கடந்த 2011-ல் கந்தர்வக்கோட்டை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி யில் சுயேச்சையாக போட்டியிட் டுள்ளார்.

தேர்தலில் தற்போது நடை முறையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையை ரத்து செய்துவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி சைக்கிள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தனது சைக்கிளில் பல்வேறு கட்சித் தலைவர்களின் படங்க ளுடன் கோரிக்கை அடங்கிய பேனரை வைத்துக்கொண்டு, புதுக்கோட்டையில் பேருந்து நிலையம், திருவப்பூர், திருக்கோ கர்ணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று பிரச்சாரம் செய்தார். “திருச்சி வழியாக சென்னைக்கு பிரச்சாரம் செய்ய செல்ல உள்ளேன்” என ரத்தினம் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close