[X] Close

பாஜகவில் இணைகிறார் ஜெயப்பிரதா


  • kamadenu
  • Posted: 26 Mar, 2019 06:40 am
  • அ+ அ-

தமிழ்நாடு அரசு, நீதிமன்ற ஆணைகளின்படி வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகளை தமிழில் வைப்பது அவசியம் என்று அறிவுறுத் தப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வணிக நிறுவனங்களின், பெயர்ப் பலகைகளில் நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழிலும் அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் அவரவர் விருப்ப மொழிகளிலும் இடம் பெறுமாறு அமைத்திட வேண்டும் என மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் கடந்த இரு 3 மாதங்களாக மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அறிவுறுத்தி வந்தனர்.

அதன்படி பெயர் பலகைகளில் இடம் பெறும் தமிழ் எழுத்துக்களின் அளவு தமிழ், ஆங்கிலம், பிறமொழி ஆகியவை முறையே 5:3:2 என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும் தேர்வில் முறையே 5:3 என்ற விகிதத்தில் அமைக்க வேண்டும். மேற்குறிப்பிட்டவாறு பெயர்ப் பலகைகளை அமைக்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்வளர்ச்சித் துறை அலுவலர்களின் தொடர் முயற்சியின் பலனாக சில வணிக நிறுவனங்கள் தங்களது பெயரை தமிழ் மொழியில் வைத்துள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் பலகை வைத்து வியாபாரம் செய்து வந்த பிரபல வணிக நிறுவனமான ராம்ராஜ் காட்டன், தங்களது கடலூர் கடையில் தமிழில் பெயர் பலகை வைத்துள்ளனர், இப்படி தமிழகம் முழுவதும் மாற்றியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று கடலூரைச் சேர்ந்த எஸ்.எஸ் ஆயில் நிறுவனம் தனது பெயரை சகுந்தலா சம்மந்தம் எண்ணெய் நிறுவனம் என பெயர் மாற்றம் செய்துள்ளது. இதேபோன்று கடலூர் நகரைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றாக தமிழில் பெயர் பலகை வைத்து வருகின்றன.

இது தொடர்பாக சகுந்தலா சம்மந்தம் எண்ணெய் நிறுவன உரிமையாளர் ரவியிடம் கேட்டபோது, "4 வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கட்டாயத்தின் பேரில் பெயர் மாற்றம் செய்யவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையின் அணுகுமுறையும், தாய்மொழிக்கு சிறப்பு செய்யும் வகையிலும் இருப்பதால் விரும்பி மாற்றியுள்ளோம். கூடவே என் தாய் தந்தைக்கு ஒரு மரியாதை செய்யும் வகையிலும் பெயரை மாற்றியிருக்கிறோம்.

இதனால் சில பிரச்சினைகளும் உண்டு. 'எஸ்எஸ்' என்ற பிராண்டு என்ற பெயரில் பிரபலமாகி விட்டோம். வாடிக்கையாளர்களும் எளிதாக உச்சரிக்கும் வகையில் இருந்தது. அதை மாற்றியிருக்கிறோம். மேலும் ஒரு நிறுவனத்தை பதிவு செய்யும்போது, தமிழ் பெயர் பலகைக் குறித்து தொடக்கத்திலேயே வலியுறுத்தினால், உணவுப் பொருள் சான்றிதழ், வணிக வரிச் சான்றிதழ், மின் இணைப்புச் சான்றிதழில் பெயர் மாற்றம் செய்ய அவசியம் ஏற்படாது'' என்றார்.

இது தொடர்பாக மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அன்பரசியிடம் கேட்டபோது, ''கடலூர் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்களுக்கும் விடுத்த வேண்டுகோளை ஏற்று சிலர் மாற்றி வருகின்றனர். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எஞ்சிய பலரும் மாற்ற முன்வர வேண்டும். இந்த மாற்றம் இளைய தலைமுறைக்கு உத்வேகம் அளிக்கும்'' என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close