[X] Close

மக்களை துரத்தி காதை செவிடாக்கும் ‘ஏர் ஹாரன்கள்’: கோவை, திருப்பூரில் ஓராண்டில் 3,000 பறிமுதல்


air-horn

கோவையில் தனியார் பேருந்துகளில் இருந்து அண்மையில் பறிமுதல் செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள். (கோப்புப்படம்)

  • kamadenu
  • Posted: 10 Mar, 2019 09:35 am
  • அ+ அ-

தனியார் பேருந்துகள், லாரிகள் உள் ளிட்ட வாகனங்களில் இருந்து கடந்த ஓராண்டில் அதிக ஒலி எழுப்பும் 3,059 ஏர் ஹாரன்களை கோவை மண் டல போக்குவரத்துத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்துள்ளனர்.

தனியார் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ‘ஏர் ஹாரன்’ களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தலை மையில், போக்குவரத்து ஆய் வாளர்கள் அவ்வப்போது அதிக ஒலி எழுப்பும் வாகனங்களைக் கண்டறிந்து, ஏர் ஹாரன்களை பறி முதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும் பயன்பாடு குறையாததால் கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர், நோயாளி கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

மத்திய மோட்டார் வாகன விதிப் படி தடை செய்யப்பட்ட இடங்களில் கண்டிப்பாக அதிக ஒலியை எழுப் பக்கூடாது. அதேபோல, குறிப்பிட்ட டெசிபலுக்கு மேல் ஒலியை எழுப்புவதும் விதிமீறலாகும்.

கோவை, திருப்பூர், நீலகிரியை உள்ளடக்கிய கோவை மண்டலத் தில் மட்டும் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை தனியார் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் இருந்து அதிக ஒலி எழுப்பும் 3,059 ஏர் ஹாரன்களை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய் துள்ளனர். இதில் அதிகபட்சமாக 2018 மார்ச் மாதம் மட்டும் 352 ‘ஏர் ஹாரன்’கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கோவை மண் டல போக்குவரத்து இணை ஆணை யர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி கூறிய தாவது: தனியார் பேருந்துகளில் ‘ஏர் ஹாரன்’களை அதிகம் பயன் படுத்துகின்றனர். அதேபோல, லாரி களிலும் பயன்படுத்துகின்றனர். எனவே, அவ்வப்போது ஆய்வு செய்து ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்கிறோம். சட்டவிரோதமாக ஏர்ஹாரனை பயன்படுத்து வோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,000, அதிகபட்சம் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

காரணம் என்ன?

சாலையில் செல்லும் மற்ற வாகனங்கள் குறுக்கே வராமல் ஒதுங்கிப்போகச் செய்யவே அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை கனரக வாகனங்களில் பயன்படுத்துகின்ற னர். சாலையில் செல்லும்போது திடீரென ஏர் ஹாரனை அடிக்கும் போது முன்னே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சில குறிப்பிட்ட வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் அதிக அளவு இயக்கப்படுகின்றன. உதாரணமாக, பொள்ளாச்சி-கோவை, கோவை- மேட்டுபாளையம் வழித்தடங்களை குறிப்பிடலாம். இதுபோன்ற வழித் தடங்களில் தனியார் பேருந்து களுக்கு இடையே நிலவும் போட்டி காரணமாகவும், வழித்தடங்களில் ஆங்காங்கே பயணிகளே ஏற்றி, இறக்கி செல்வதாலும் அவர்களுக்கு நேர நெருக்கடி ஏற்படுகிறது. அதை சாலையில் செல்லும்போது சமன் செய்யப் பார்க்கின்றனர். எனவே, இடையூறு இல்லாமல் வேகமாக செல்ல ஏர் ஹாரனை பயன்படுத்துகின்றனர்.

எந்த வாகனத்திலாவது ஏர் ஹாரனை பயன்படுத்தினால், அந்த வாகனத்தின் எண், பேருந்தாக இருந்தால் வழித்தடம் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு jtccbe@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு புகார் அனுப்பினால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுமக்கள் பாராட்டு

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை குறித்து பொதுமக்கள் தரப்பில் கூறும்போது, ‘‘காதை துளைக்கும் வகையில் தனியார் பேருந்துகளில் இருந்து எழுப்பப்படும் ஏர்ஹாரனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. ஏர்ஹாரனில் இருந்து எழும் அதிக ஒலியால் குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஏர்ஹாரன்களை பேருந்துகள், லாரிகளில் இருந்து அகற்ற அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இதனை அவர்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close