[X] Close

கிலானிக்கு ரூ.14 லட்சம் அபராதம்: அமலாக்கத் துறை உத்தரவு


14

  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 08:56 am
  • அ+ அ-

ஜெமினி தனா

சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு

சாயக்கிளியே சாய்ந்தாடு..

குத்துவிளக்கே சாய்ந்தாடு..

 கோவில் புறாவே  சாய்ந்தாடு..

 என்று அழும் குழந்தைகளை, பாட்டிகளாலும் அத்தைகளாலும் அம்மாக்களாலும் சித்திகளாலும் இப்படித்தான் சமாதானம் செய்யப்பட்டன.  கால்களை நீட்டி குழந்தைகளை முழங்கால்களில் ஒருபுறமாக அமர்த்தியபடி முன்னும் பின்னும் தாலாட்டுப் பாடுகிற  பாடல்களைக் கேட்கவே நாதமாக இனிக்கும். அழும் குழந்தை பொக்கை வாயுடன் கண்கள் மின்னச் சிரிக்கத் தொடங்கிவிடும்.  தூளியில் தூங்கும் குழந்தைகள் தூக்கத்தில் சிணுங்குகிற போதெல்லாம்  கிலுகிலுப்பைகளின்   சிங்காரமான சத்தத்தோடு  மீண்டும் தூக்கத்துக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்.

கிலுகிலுப்பை, சாவி கொடுத்தால் மேளம் கொட்டும் பொம்மைகள் மாதிரியான விஷயங்கள்,  டெக்னாலஜி டெவலப்மெண்ட்டில் உருத்தெறியாமல் போய்விட்டன. அழும் குழந்தைகளை சமாதானப்படுத்த ஆன்ட்ராய்டு ஃபோன் இருக்கும்போது அப்பத் தாக்களும், அம்மாச்சிகளும் தனிமைப்படுத்தப்பட்டார்கள் என்பது இன்னொரு வேதனை.

 ஃபோட்டோ எடுத்தா ஆயுசு குறைஞ்சிடும் என்று 80 வயதிலும்  காமிராக்களில் ப்ளாஷ்களில் கண்களை மூடிக்கொள்ளும் நிலை மாறி பிறந்த பத்தாவது நாளிலேயே மூச்சுக்கு முன்னூறு முறை பளிச் ப்ளாஷ்களால்   படமெடுத்துத் தள்ளுகிறோம். தூர்தர்ஷன் செய்தி இசைக்கும், சன் டிவியின் லோகோ இசையையும் கேட்டு  திரும்பிய, சிரித்துக் கொண்டே அமைதியான குழந்தைகள்  செல்ஃபோன் ரீங்காரத்தில் இன்றைக்கு கிறங்கித்தான் போகிறார்கள்.

நடைவண்டியில் துளிர் நடைபோட்டு  நளினமாய் பழகிய குழந்தைகள்  கீழே விழுந்து  அழுதால்  யாரு அடிச்சா கண்ணா  என்று  தரையில் ஒரு தட்டு தட்டும் போது  குழந்தை  வலியை மறந்து பொக்கை வாய் திறந்து சிரிக்கும். முகத்தை கைகளால் பொத்தி ம்ம்.. என்று அழுது குழந்தையின்  கவனத்தை திசை திருப்பி கைகளை விலக்கி ’பூச்’ காட்டும்போது குலுங்க குலுங்க சிரித்த குழந்தை இன்றும் சிரிக்கிறது.  வாயில் மூச் என்று விரலை வைத்து  அழு கையை சமாதானப்படுத்தவே வந்திருக்கும் ஆண்ட்ராய்டு போன்கள்!

’என்னாச்சு... குழந்தை அழுவுது... ஆண்ட்ராய்டு ஃபோன் கொடு. நீ அழும்போது அதைத்தான் கொடுத்தேன் என்று  அண்ணன்களுக்கும், அக்காள்களுக்கும் சொல்லிக்கொடுக்கும் அம்மாக்கள் அதிகரித்துவிட்டார்கள்.

ஓடி ஆடி பொருள்களைக் கலைத்துப் போட்ட குழந்தைகள், ஓடாமல் ஓரிடத்தில் அமர  அம்மாக்களுக்கு ஆண்ட்ராய்டு மொபைல்கள் மட்டுமே கைகொடுக்கின்றன. அழுத குழந்தை சிரிச்சிச்சாம்.. ஆன்ட்ராய்டு ஃபோனை பார்த்துச்சாம்.. என்று குழந்தைங்கள் ஆன்ட்ராய்டு ஃபோன்களில் ஐக்கியமாகி விடுகிறார்கள்.

சாப்ஃட் ஆன கேம்களான டாக்கிங் டாம், மை ஹேங்க், டேப் கலர், குக்கின் ஃபீவர், நிஞ்ஜம்ப், சப்வே சஃபர்ஸ், டெம்பிள் ரன்... இப்படியான கேம்களை பழகத் தொடங்கும் போதே ’ஆப்’களிலிருந்து கேம்களை  தரவிறக்கம் செய்வதிலும்  வல்லவர்களாகி விடுகிறார்கள். அதேநேரம் வன்முறையைத் தூண்டும் வகையில் ஆக்‌ஷன் கேம் சாம் ஆன்ட்ரியூஸ், ஜிடிஏ வைஸ் சிட்டி, பப்ஜி மொபைல்ஸ்... இப்படி குழந்தைகளுக்கு  வாயில் நுழையாத பெயரில் அபத்தமான  வன்முறை விளையாட்டுகளும் குழந்தைகளின் உலகில் பிடித்த விளையாட்டாக ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன.  

அன்பு, அரவணைப்பு, சிரிப்பு  நிறைந்த குழந்தைகள் உலகை செல்ஃ போன் என்னும் மாய  உலகமாக மாற்றிவிட்டோம்.

கண்டிஷன் பெயில் போல இவ்வளவு நேரம்தான் வைத்து விளையாடவேண்டும் என்று சொல்லுகிற பெற்றோர்களும் உண்டுதான். ஆனால்   அதெல்லாம் வளர்ந்த குழந்தைகளுக்குதான் என்பதால் இந்தக் கட்டுரைக்குள் அவர்களுக்கு வேலையில்லை. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பிடியாட்ரிக்ஸ் என்ற ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆய்வு ஒன்றில்  அதிக சதவீத பெற்றோர்கள் குழந்தைகளிடமுள்ள செல்போன் ஆர்வத்தைப் பெருமையாக பேசுவதிலும் ஊக்கப்படுத்துவதிலுமே இருக்கிறார்கள் என்று அறிவித்துள்ளது.    

 நான் டென்ஷனில்லாம வேலை செய்யும் போது குழந்தையை எப்படி பாத்துக்க முடியும். நாலு கால்ல நடக்கும் போதே பால்கனியில் எட்டிப்பார்க்கிறா. வீட்ல  ஒருபொருளை கீழே வைக்கமுடியல.  டிவியில, சிஞ்சான்  பார்த்தாலும்  போரடிச்சதும்  அழ ஆரம்பிக்கிறா.  அதான் போன்ல டாக்கிங் டாம் வெச்சுக் கொடுத் திட்டேன்.  இப்ப அவ பேசறதையே டாமும் பேசும் போது என்னமா சிரிக்கிறா தெரியுமா?

ரெண்டு வயசுதான் ஆகுது.. அதுக்குள்ள  போன்ல எல்லா அப்ளிகேஷனையும்  யூஸ் பண்ண தெரிஞ்சுக்கிட்டா,  போட்டோ கூட எடுக்கிறா என்று சிலாகிக்கும் அம்மாக்களுக்கு செல்போன்களால் உள்ளங்கையில் உலகில் நடக்கும் நிகழ்வுகளை அறியலாம். ஆனால் அறிவு வளருமா? என்று யோசிக்க வேண்டும்.

  வயித்து வலிக்கு அழுவுதா..  பூச்சிகீச்சி கடிச்சி அழுவுதா என்றே  காரணம் தெரியாமல் தவித்த காலம் போய்,  செல்ஃபோனில் வைத்த கேமை மாற்றி மாற்றி காண்பித்து அப்போதைக்கு அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்தவே முயற்சிக்கிறோம். செல்லுமிடங்களிலெல்லாம் குழந்தையும் போனும் பிரிக்க முடியாத பந்தமாய்  தொட்டுத் தொடரும்  பாரம்பரியமாய் பிணைந்திருப்பதை குழந்தை அமைதியாக இருக்கிறானே  என்று  மனதுக்குள்ளேயே  சலாம் போட்டுக்கொள்கிறோம்.

 அன்று  பத்து பிள்ளைகள் இருந்தாலும் எல்லோருக்கும் எல்லா உறவும் கிடைத்தது. இன்று ஒத்தை பிள்ளைக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள செல்போன்தான் துணையிருக்கிறது.

 குழந்தைகளிடம் மாட்டிக்கொண்டு செல்போன் படும் பாடுகள் பாவம் தான். கோபத்தில்  வீசியடிப்பதும் ஒரு தம்ளர் தண்ணீர் இருந்தாலும்  குளிப்பாட்டுகிறேன் என்று செல்போனை முக்கியெடுப்பதும் தனிக்கதை.

குழந்தையின் உபயத்தால் வருஷத்துக்கு நான்கு போன்கள் என்று பட்ஜெட்டில் துண்டு விழுகிறது. 10 ஆயிரமாக இருந்தால் என்ன.. 50 ஆயிரமாக இருந்தால் என்ன ஆன்ட்ராய்டு போன்தான் தேவை. அதில்லாமல் இருக்க முடியுமா என்ன?

   செல்போன் கதிர்வீச்சு குழந்தைகளின் உடல் உறுப்புகளைப்  தாக்கும்.  குறிப்பாக மூளை வளர்ச்சியடையும் போது இந்த கதிர்வீச்சு மூளையையும் பாதிக்கும். ஹார்மோன் சுரப்பிகளில் மாற்றம் உண்டாகும். குழந்தைகள்  காரணமின்றி அடிக்கடி பதட்டப் படுவார்கள். செல்போன்கள் தூக்கி வீசும் போது கூட,  இந்த வய சிலயே எவ்வளவு கோபம் வருது பாரேன் என்று வாட்ஸ் அப்பில் வீடியோ எடுத்து பகிரும் பெருமைமிக்க பெற்றோர்களும் இருக்கிறார்கள். செல்ஃபோன் உபயோகத்தில் பட்டம் முடித்த பின்பே குழந்தைகள்   ஃப்ரீகேஜி செல்கிறார்கள்.

 பிறந்த குழந்தையின்  மூளைவளர்ச்சி  என்பது 75% மூன்று வயதுக்குள் என்று சொல்கிறார்கள். இந்த மூன்று வயதுக்குள் நாம் குழந்தைக்கு கற்றுத்தருவது அனைத்துமே அழகாய் மூளையில் பதிந்துவிடும்.    பில்டிங் பிளாக்குகளில் வீடு கட்டும் குழந்தைகள் வீடு சரியும் போது உடைந்து அழுவார்கள். இதெல்லாம் ஒன்றுமே இல்லை கண்ணா..  முதல்ல எப்படி கட்டணும்னு யோசி, நிதானமா கட்டினா ஸ்ட்ராங்கா இருக்கும். நம்ம வீடு மாதிரி என்று சொல்லி இலேசாக தோள் சாய்த்தால் இப்படித்தான் எல்லா விஷயங்களை கையாள வேண்டும் என்ற  பக்குவத்தை மூளையில் பதிந்து கொள்வார்கள்.

நிலாவில்  இல்லாத பாட்டியை காட்டி சோறு ஊட்டும் போது, ’நீ   நல்லாப் படிச்சு பெரியவனானதும் என்னை அங்கே கூட்டிப்போறியா  என்று கேட்கும் போது   படிச்சா  நிலாவுக்கே போகலாம் எனும் சிந்தனை அங்கே முளைக்கும். இப்படித்தான் எடுத்த பொருளை  எடுத்த இடத்தில் வைக்க வேண்டும்.  குப்பையை தொட்டியில் போட வேண்டும் என்று ஒவ்வொன்றையும் நாம் செய்யச் செய்ய குழந்தைகளும் கற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகள் வளரும் போது  மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்காமல் பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும், சீரியலிலும்   நம் நேரத்தை செலவிட்டு  அவர்கள் வளர்ந்த பிறகு  என்னிடம் பேசக்கூட நேரமில்லாமல் என்னை தனிமையில் தவிக்க விட்டார்களே என்ன வசதி இருந்து என்ன பிரயோஜனம் என்று  புலம்புவது எந்த வகையில் நியாயம்?

தொடர்புக்காக உருவாக்கப்பட்ட  சாதனம் செல்போன்... அவ்வளவுதானே! ஆனால் குழந்தைகளை விட வேகமாக வளர்ந்து, தன் ஆக்டோபஸ் கரங்களால், முழுக்க ஆக்கிரமித்துக் கொண்ட செல்போனில் இருந்து குழந்தைகளை விடுவிப்பது அவசியம்.

அதற்கு முதலில்... செல்போனின் பிடியிலிருந்து நாம் விடுவித்து வெளிவரவேண்டும்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close