[X] Close

பாகிஸ்தான் மீதான தாக்குதலால் உ.பி.யில் பாஜக கூடுதலாக 12 இடங்களில் வெல்லும்: கருத்து கணிப்பில் புதிய தகவல்


modi

  • நெல்லை ஜெனா
  • Posted: 05 Mar, 2019 13:36 pm
  • அ+ அ-

புதுடெல்லி

பாகிஸ்தான் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பிறகு உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணி கூடுதலாக 12 இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.

இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் விமானப்படைத் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு சிஎன்எக்ஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 41 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. அதேசமயம் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும். பாஜக மட்டுமின்றி காங்கிரஸூக்கும் தற்போது உ.பி.யில் ஆதரவு அதிகரித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி 16 இடங்களிலும், சமாஜ்வாதி 18 இடங்களஇலும் வெற்றி பெறும் எனவும், இந்த கூட்டணியில் உள்ள அஜித் சிங்கின் கட்சி மற்றும் அப்னா தளம் கட்சிகள் தலா ஓரிடங்களில் வெற்றி பெறும். அதேசமயம் தனித்து போட்டியிடும் காங்கிரஸ் 4 இடங்களில் வெற்றி பெறும்.

விமானப்படைத் தாக்குதலுக்கு முன்பாக பிப்ரவரி மாதம் சிஎன்எக்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெறும் கணிக்கப்ப்டடு இருந்தது. பாஜக கூட்டணி 29 இடங்களில் மட்டுமே வெல்லும் என தகவல்கள் வெளியாகி இருந்தது. அதுபோலவே காங்கிரஸூம் 2 இடங்களில் மட்டுமே வெல்லும் என முந்தை கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close