[X] Close

மகிழ்ச்சிக்கான ஓய்வுகால வீடுகள்


retirement-home

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 22:28 pm
  • அ+ அ-

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உகந்த வசதிகளுடன் ரிடையர்மெண்ட் கம்யூனிட்டி எனும் பெயரில் வளர்ச்சி அடைந்து வருகிறது. வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வகையான கம்யூனிட்டி கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் வளர்ந்து வருகிறது.

அதன் வழியாக 2017 ஆம் ஆண்டு ஸ்டெப்ஸ் ஸ்டோன் பிரமோட்டர்ஸ் நிறுவனம் ‘ஆலம் சீனியர் ஹெவன்’ எனும் பெயரில் ரிடையர்மெண்ட் கம்யூனிட்டியை திரு. மோதிஷ் குமார் மற்றும் திரு.கிரிநாத் அவர்களால் தொடங்கப்பட்டது.

இவ்வகையான கம்யூனிட்டி மூத்த குடிமக்களுக்கு நிறைவான மன அமைதி, பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டெப்ஸ் ஸ்டோன் பிரமோட்டர்ஸ் நிறுவனம் முதல் ரிடையர்மெண்ட் வீடுகள் பொள்ளாச்சியில் ‘சீனிவாச பார்ம்ஸ்’ என்னும் பெயரில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதன்முதலில் சென்னையில் ரிடையர்மெண்ட் வில்லாக்கள் ‘ஆலம் @ நேமம்’ எனும் பெயரில் இரண்டாவது ப்ராஜெக்ட் அறிமுகப்படுத்தப்பட்ட பெருமையும் இந்நிறுவனத்திற்கு உண்டு. இப்பொழுது இதன் தொடர்ச்சியாக கோவையில் ‘ஆலம் @ கோவை’ எனும் பெயரில் மார்ச் 2 & 3 ஆம் தேதிகளில் மிக பிரம்மாண்டமாக ‘தாஜ் விவான்தா’ கோயம்புத்தூரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்நிறுவனம் கட்டிடம் கட்டுவது மட்டுமல்லாமல் அதனுடன் வயதானவர்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் செய்து தருகிறது.

சேவைகள்:

வீடுகளை சுத்தம் செய்வது, மையப்படுத்தப்பட்ட உணவு கூடம், 24x7 ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை, கண்காணிப்பு கேமரா வசதியுடன் கூடிய பாதுகாப்பு, கிளப் ஹவுஸ் வசதியும் தரப்படுகிறது.

இன்னும் 5 ஆண்டுகளில் 2500 ரிடையர்மெண்ட் வீடுகளுடன் கூடிய அனைத்து சேவைகளையும் செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close