[X] Close

’நேத்து ராத்திரி யம்மா...; அப்போ இளையராஜா சாமியார் இல்ல!’ - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஜாலிகேலி


spm-ilayaraaja-75

சகலகலாவல்லவன்

  • வி.ராம்ஜி
  • Posted: 17 Feb, 2019 11:44 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘நேத்து ராத்திரி யம்மா’ பாட்டு பண்ணும் போது அந்த ‘யம்மா’வை சொன்னவரே இளையராஜாதான். அப்போ அவர் சாமியார் இல்ல, ஞானி இல்ல’ என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்தார்.

இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி தனியார் சேனலில் நடைபெற்றது. இதில் இளையராஜாவுடன் இயக்குநர்கள் ஆர்.சுந்தர்ராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பி.கண்ணன், சந்தானபாரதி, மிஷ்கின் கலந்துகொண்டனர்.

அப்போது எஸ்.பி.முத்துராமன் தெரிவித்ததாவது:

இதுவரை 70 படங்கள் இயக்கியிருக்கிறேன். இதில் 37 படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருக்கிறார். அவருடன் நான் இணைந்து பணிபுரிந்த முதல் படம் ‘காற்றினிலே வரும் கீதம்’. அதில் மிகச்சிறந்த பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியிருப்பார்.

அதேபோல், ‘சகலகலாவல்லவன்’ படத்தில், அவர் போட்டுக்கொடுத்த ‘ஹேப்பி நீயூ இயர்’ பாட்டுதான் இன்று வரை புத்தாண்டின் போது பாடப்படுகிறது. அவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நான் நினைக்கவே இல்லை.

அந்தப் படத்தில், ‘நேத்து ராத்திரி யம்மா’ பாட்டு ரொம்பவே ஹிட்டடித்த பாட்டு. அதில் ‘யம்மா’ என்ற வார்த்தையும் டியூனும் அந்தப் பாட்டை பெரிய வெற்றியாக்கியது. அந்தப் பாட்டு போடுகிற போதெல்லாம், அவர் சாமியார் இல்லை. ஞானி இல்லை’ என்று தெரிவித்தார்.

உடனே, ‘இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டதாலதான் ஞானி’ என்று சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close