[X] Close

ரேடியோ தினம்; தென்கச்சி ஹாஸ்யம் – கிரேஸி மோகன்


radio-day-thenkachi-crazy

கிரேஸி மோகன்

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 20:06 pm
  • அ+ அ-

இன்று வானொலி நாள்: பிரபல வானொலி அறிவிப்பாளர் தென்கச்சி சுவாமிநாதனைப் பற்றி...   ’இந்து தமிழ்’ நாளிதழில் ‘க்ரேஸியை கேளுங்கள்’ கேள்வி - பகுதி பகுதியில் கிரேஸி மோகன் சொன்னது இது:

என் கட்சி எப்பவுமே ‘தென்கச்சி’தான்! யாம் அறிந்து இரண்டு கலைவாணிகள் உண்டு. ஒருவர், ஆய கலைகள் அறுபத்தி நான்கினை ஆளும் வாணி. இன்னொருவர், ஹாஸ்ய கலையை மட்டும் அள்ளி வழங்கும் ஆஹாஸ்ய வாணி (ஆகாச வாணி).

இந்த ‘ஆஹாஸ்ய வாணியின்’ ஒரே வாரிசு ஆல் இண்டியா ரேடியோவில் ‘இன்று ஒரு தகவல்’ வழங்கிய தென்கச்சி சுவாமிநாதன். இவர், வாழ்க்கைக்கு பகைச் சுவையான எதிர்க் கட்சிகளை நகைச்சுவையால் ஆளும் தென் கட்சியார். இவரது ‘சிரிப்போம்… சிந்திப்போம்’ என்கிற புத்தகத்துக்கு அணிந் துரை எழுதும் வாய்ப்பு அடியேனுக்குக் கிட்டியது.

தென்கச்சியார் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பழுத்த நகைச்சுவை ஞானப்பழம். நானோ, நேற்று முளைத்த அவ(ச)ரக்காய். ‘கனிக்கு அணிந்துரை வழங்க காய் கவர்ந்தற்று’ என்று நீங்கள் கூறலாம். என்ன செய்வது? என் அதிர்ஷ்டம் இந்தப் பழம் நழுவி ‘என் பால்’ விழுந்துவிட்டது.

படிப்பவர்கள் ரசனை மேம்படும் அளவுக்கு, சிரிப்பின் படம் வரைந்து அதன் பாகங்களைக் காட்டியவர் பேராசிரியர் தென்கச்சியார். ‘Humour is the Salt of the Life’ என்பார்கள். தென்கச்சியாரின் சிரிப்பு என்கிற இந்த உப்பு அதிகமானால்… B.P குறையும். யாரையும் கரிக்காத இவரது சிரி(உ)ப்பு டயாப்டீஸை போக்க வல்ல இனிப்பு.

இன்சுலின் போல… இது ‘இன் சொலின்’. ஜோஸ்யத்தை நம்புவதைவிட தென்கச்சியின் ஹாஸ்யத்தை நம்பலாம். இவரது எழுத்தைப் படிப்பது ‘இம்மை சுகம்’ என்றால்… மேடையில் இவர் பேச்சைக் கேட்பது ‘மறுமை மோட்சம்’. தமிழ் இலக்கணத்தில் ‘உயர்வு நவிற்சி அணி’ என்று ஒன்று உண்டு. தென்கச்சியாருடையது ‘உயர்வு நகைச்சுவை அணி’!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close