[X] Close

‘பாக்யராஜ் பத்தி தப்புக்கணக்கு போட்டுட்டேன்! - இளையராஜா ஓபன் டாக் 


bhagyaraj-ilayaraaja

புதிய வார்ப்புகள் - பாக்யராஜ், ரதி

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Feb, 2019 16:15 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

‘பாக்யராஜ் பத்தி தப்புக்கணக்கு போட்டேன். அவரோட திறமையை தெரிஞ்சுக்காமலே தப்பா பேசினேன்’ என்று இளையராஜா மனம் திறந்து சொன்னார். 

இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி, தனியார் சேனலில் நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் எண்பதுகளின் நாயகிகள் பலரும் கலந்துகொண்டனர். 

கூடுதலாக நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் கலந்துகொண்டார். 

அப்போது பாக்யராஜ் குறித்து இளையராஜா தெரிவித்ததாவது:

16 வயதினிலே படத்துக்கான ரீரிக்கார்டிங் வேலை நடந்துக்கிட்டிருந்துச்சு. 

உள்ளே பாக்யராஜும் இருக்கார். ஆனா அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. ரிக்கார்டிங் பண்ணும் போது வசன போர்ஷன்லாம், மியூட்ல இருக்கும். அப்ப, ரிக்கார்டிங் நடக்க ஆரம்பிச்சாச்சு. அங்கேருந்து சார்… சார்… சார்…னு ஒரு குரல். டயலாக் வரல சார், டயலாக் வரல சார்னு பாக்யராஜ் கத்துறாரு.

‘யாருய்யா அது’ன்னு பாரதிராஜாகிட்டகேட்டேன். ‘அட என் அசிஸ்டென்ட்டுய்யா. ஷூட் பண்ணின ரீலெல்லாம் எடுத்துப்பாக்கட்டுமா?’ன்னு கேட்டான்யா இவன்’னு பாரதிராஜா சொன்னார்.

அதுக்குப்பிறகு புதிய வார்ப்புகள் சமயம். ‘ஹீரோவா நடிக்க பலபேரை பாத்தாச்சு. செட்டாகலை. கடைசில பாக்யராஜையே போட்டுட்டேன்’ன்னு பாரதிராஜா சொன்னார். நான் பாக்யராஜ்கிட்ட ஏன் பாக்யராஜ் இப்படி?’ன்னு கேட்டேன். ‘எவ்வளவோ சொன்னேன். டைரக்டர் சாரோட பிடிவாதம்தான் உங்களுக்குத் தெரியுமே சார். தட்டமுடியலை’ன்னு பாக்யராஜ் சொன்னாரு. ‘படம் முழுக்க உன் நடிப்பையெல்லாம் பாத்துட்டு, மியூஸிக் போடணுமே நான்’னு சொன்னேன்.

ஆனா, அது எவ்ளோ பெரிய தப்புன்னு அப்புறமா உணர்ந்தேன். படத்துக்கு நீயே போய் கதை சொல்லிருன்னு பாக்யராஜை எங்கிட்ட அனுப்பிவைச்சாரு பாரதிராஜா. அவர் கதை சொன்ன விதம் பாத்து அசந்துட்டேன். ’ச்சே.. பாக்யராஜ் பத்தி நாம தப்பான முடிவை எடுத்திட்டோமே’னு வருத்தப்பட்டேன். 

இவ்வாறு இளையராஜா தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close