[X] Close

எய்ம்ஸ்’க்கு பின்னால் இருக்கும் அரசியல்: மதுரையை குறி வைக்கும் பிரதமர் மோடி


the-politics-behind-aiims

  • kamadenu
  • Posted: 31 Jan, 2019 11:17 am
  • அ+ அ-

மதுரை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மக்களவைத்தேர்தல்நெருங்கும் நேரத்தில்சத்தமில்லாமல் பிரதமர்மோடி மதுரை மண்டேலாநகரில் தோப்பூர் ‘எய்ம்ஸ்’மருத்துவமனைக்கு அடிக்கல்நாட்டி சென்றுள்ளார். இந்தவிழா, முழுக்க முழுக்க மத்தியஅரசு விழாவாகவே நடந்துமுடிந்துள்ளது. 

பாஜகதிட்டமிட்டபடி தோப்பூர்‘எய்ம்ஸ்’ விழா,பிரமாண்டமாக நடந்துமுடிந்திருந்தாலும் விழாவுக்குவந்திருந்த மோடி முகத்தில் மகிழ்ச்சியில்லை.இருக்கமாக இருந்துசென்றார். பொதுவாகவிழாக்களில் பிரதமர் மோடிபார்வையாளர்களை நோக்கிஉற்சாகமாக கைகளைஅசைத்தப்படியேபங்கேற்பார். அதுபோல்,அவரது பேச்சில் எழுச்சியும்,ஆவேசமும் இருக்கும்.ஆனால், ‘எய்ம்ஸ்’விழாவிலும்சரி, அந்த விழா அருகே நடந்தபாஜகவினர் ஏற்பாடுசெய்திருந்தபொதுக்கூட்டத்திலும் சரிஅவரது பேச்சு எழுச்சியூட்டும்விதமாக அமையவில்லை.

ஆனால்,எய்ம்ஸ்’ மதுரைக்குகிடைத்ததிலும், மோடிநேரடியாக வந்து அடிக்கல்நாட்டி சென்றதின்பின்னணியிலும் விவரம்தெரிந்தவர்கள் கூறியஅரசியலை கேள்விப்பட்டுதற்போது பாஜகவினர்உற்சாகம் அடைந்துள்ளனர்.

பாஜகஇந்தமுறைஅதிமுகவுடன் கூட்டணிஅமைத்து போட்டியிட முடிவுசெய்து அவர்களுடன்திரைமறைவில்பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.அதில், பாஜக கேட்கும்முக்கிய தொகுதியாக மதுரைஇருக்கிறது. அதிமுகவும்பாஜகவுக்கு மதுரையைவிட்டுக்கொடுக்கதயாராகிவிட்டதாககூறப்படுகிறது. மதுரையில்பாஜக போட்டியிடஆர்வப்படுவதற்கும், இந்ததொகுதியை கைப்பற்றதிட்டமிடுவதற்கும் முக்கியகாரணம், இந்த தொகுதியின்கடந்தகால வரலாறுபாஜகவுக்குநம்பிக்கையளித்துள்ளதாககூறுகின்றனர். 

குறிப்பாக எந்த தனிப்பட்டசெல்வாக்கும்,வாக்குவங்கியும் இல்லாதசுப்பிரமணியசுவாமி கூடபோட்டியிட்டு வெற்றிப்பெற்றவரலாறு மதுரைக்கு உள்ளது. 8 முறை காங்கிரஸ் கட்சியும்,ஒரு முறை சிபிஐ-யும், 3 முறைசிபிஎம்-ம் வெற்றிப் பெற்றுள்ளன.தமாகா ஒரு முறையும்,வெற்றிப்பெற்றுள்ளனர். 

கடைசியாக 2009, 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களில் மட்டுமே திமுகவும், அதிமுகவும் வெற்றிப் பெற்றுள்ளன.சட்டமன்ற தேர்தல்களில் மதுரையில் செல்வாக்கு செலுத்தும் திராவிட கட்சிகள்,மக்களவைத்தேர்தலில் மதுரையில் போட்டியிட தயக்கம் காட்டியே வந்துள்ளன. மேலும், தென்மாவட்டங்களில் வளர்ச்சியில்திராவிட கட்சிகள் பெரியளவில் அக்கறை காட்டவில்லை. அதனால், இங்குள்ள தொழில்முனைவோர்களும்,பொதுமக்களும்அதிருப்தியில் உள்ளனர்.

இதை சாதகமாக்கி பாஜகமதுரைக்கும், தென்மாவட்டங்களுக்கும் பல்வேறுதிட்டங்களை அறிவித்துமக்களவைத்தேர்தலில்ஆதாயம் பார்க்க துடிப்பதாக கூறப்படுகிறது.  

மதுரையைதவிர கன்னியாகுமரி,தென்காசி, திருப்பூர், கோவைஉள்ளிட்ட 9 தொகுதிகள்பாஜக கேட்பதாககூறப்படுகிறது. இதில்,மதுரையை மையமாககொண்டு தென்மாவட்டங்களில் பாஜக கால்ஊன்ற முயற்சி செய்வதாகதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது. பிரதமர்மோடியைபொறுத்தவரையில் இந்தமக்களவைத்தேர்தலில்பாஜக பலவீனமாக இருக்கும்மாநிலத்தில்தான்போட்டியிட்டு வெற்றிப் பெறஆசைப்படுவதாகவும்,அதற்கான ஆலோசனையில்ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தவகையில் தமிழகத்தில்ஏதாவது ஒரு தொகுதியில்மோடி போட்டியிட உள்ளதாகஅக்கட்சியில் ஒரு தகவல்பரவுகிறது. அதில்,முதலிடத்தில் இருப்பதுமதுரை என்று அக்கட்சிவட்டாரத்தில் கூறுகிறார்கள். அதனாலே, தமிழக அரசேவிரும்பாவிட்டாலும் ‘எய்ம்ஸ்’மருத்துவமனையைமதுரைக்கு பாஜக கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.

‘எய்ம்ஸ்’விழாவோடு மதுரை-சென்னை தேஜஸ் சொகுசு ரயிலையும், மதுரைவிமானநிலைய விரிவாக்கப் பணிக்கு அடிக்கல் நாட்டவும் ஏற்பாடுகள் நடந்துள்ளது.ஆனால், தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமர் மோடி மீண்டும் ஒரு முறை மதுரைக்கு வரவழைத்து இந்த திட்டங்களை தொடங்கிவைத்து பிரமாண்ட பிரச்சாரக்கூட்டம் ஏற்பாடு செய்ய உள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.  மதுரை தொகுதியில் மோடி போட்டியிடாத  பட்சத்தில் உள்ளூர் பிரமுகர்களை களம் இறக்காமல் தேசிய அல்லதுமாநில அளவில் எல்லோராலும் அறியப்பட்டஒரு விஐபி வேட்பாளரைகளம் இறக்கி அவர்களை வெற்றிப்பெற வைக்கதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது. 

ரயில்வே அமைச்சர் பொறுப்பாளராக நியமனம் செய்ததின் பின்னணி:

மத்திய ரயில்வேஅமைச்சரும், நிதி அமைச்சர்பொறுப்பை கவனிக்கும்பியூஸ் கோயல் தமிழகமக்களவைத் தேர்தல்பொறுப்பாளராகநியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் இவர், பிரதமர் மோடிக்குநம்பிக்கைக் குரியவராகவும், நன் மதிப்பைபெற்றவராகவும் உள்ளார். இவர் தான் இந்த முறைமத்திய நிதித்துறை பட்ஜெட்டை தாக்கல் செய்யஉள்ளார். 

அதில்,தமிழகத்திற்கு குறிப்பாகபாஜக போட்டியிட உள்ளமக்களவைத்தொகுதிகளைகுறி வைத்து அதிகளவுதிட்டங்களையும், நிதியையும்ஒதுக்க உள்ளதாககூறப்படுகிறது. அதன்பிறகேகூட்டணியை அறிவித்துதமிழகத்தில் தேர்தல்பணியை பாஜக முடுக்கிவிடதிட்டமிட்டுள்ளனர்.அதனாலே, மதுரை வந்தபிரதமர் மோடி, வெறும்அறிவிப்புகளாக புதியதிட்டங்களை அறிவித்துவிட்டுசெல்ல மனமில்லாமல்சாதனைகளை சொல்லிசென்றதாக கூறுகின்றனர்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close