[X] Close

தமிழகத்திலேயே முதல்முறையாக சேலம் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம்: பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிப்பு


salem-bus-stand

  • kamadenu
  • Posted: 24 Jan, 2019 19:19 pm
  • அ+ அ-

பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவோருக்கு சலுகையும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குடிநீர் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பண்டங்கள் அடைக்கப்பட்ட பாக்கெட்டுகள் உள்ளிட்டவை பயன்பாட்டுக்குப் பின்னர் குப்பையில் வீசப்படுவதால் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து நீடித்து வருகிறது.

அரவை இயந்திரம்

இந்நிலையில், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சிக்கு அனுப்பும் வகையில் சேலம் மாநகராட்சி சார்பில் பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியுதவியின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் அரவை இயந்திரம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திர பயன்பாட்டை மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இயந்திரத்தில் 250 மில்லி முதல் 2.25 லிட்டர் கொள்ளளவு கொண்ட காலி பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டால் அவை அரைக்கப்பட்டு, பிளாஸ்டிக் துகள்களாக வெளியே வரும். இந்த துகள்கள் மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்படும்.

பொதுமக்களுக்கு இலவசங்கள்

பிளாஸ்டிக் பாட்டிலை அரவை இயந்தி ரத்துக்குள் போடும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சில சலுகைகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி செல்போனுக்கு 5 நிமிடம் வரை இலவசமாக விரைவாக சார்ஜ் செய்யும் வசதி, சுத்திகரிக்கப்பட்ட 250 மில்லி குடிநீரை பெறும் வசதி, வைஃபை வசதி உள் ளிட்ட சலுகைகள் உள்ளன. இச்சலுகையைப் பெற இயந்திரத்தில் உள்ள தேர்வு செய்யும் பட்டனை அழுத்த வேண்டும்.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் கூறும்போது, “தமிழகத்தில் முதல்முறையாக பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை தூக்கி எறியாமல் இயந்திரத்தில் போட்டு ஏதேனும் ஒரு சலுகையை பெற முடியும்.

இந்த இயந்திரம் மூலம் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு தவிர்க்கப்படும். இத்திட்டம் மாநகராட்சியின் மேலும் பல இடங்களில் செயல்படுத்தப்படும்” என்றார்.தமிழகத்தில் முதல்முறையாக இந்த இயந்திரம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை இதில் போட்டு ஏதேனும் ஒரு சலுகையை பெறலாம்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close