[X] Close

டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு நாடே மாறிவரும் நிலையில்  பொங்கல் பரிசு பணத்தை வங்கியில் செலுத்தாமல் அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு 


money-digital

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 06:53 am
  • அ+ அ-

டிஜிட்டல் பண பரிமாற்றத்துக்கு நாடே மாறிவரும் நிலையில், பொங் கல் பரிசாக ரூ.1,000-த்தை கையில் வழங்குவதாகக் கூறி, பொது மக்களை, அரசு அலைக்கழிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 1 லட்சத்து 91 ஆயிரத்து 54 குடும்பங்களுக்கு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, ஒரு துண்டு கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன், ரூ.1000 வழங்கும் திட்டத்தை கடந்த 5-ம் தேதி முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 7-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொங் கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக நாளொன்றுக்கு குறிப் பிட்ட கார்டுகள் என்று பிரித்து வழங்கப்படும். இந்த ஆண்டு தெரு வாரியாக பிரிக்கப்பட்டு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இதனால், நியாயவிலைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், 7-ம் தேதி பொங்கல் பரிசு ரூ.1000-த்தை வங்கியில் இருந்து பெற்று கடைகளுக்கு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அன்றைய தினம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

தெருவாரியாக தேதி பிரித்து பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டா லும், பணத்தை பிரித்து வழங்கு வதில் சிக்கல் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவானது. குறிப்பாக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் 1000-க் கும் மேற்பட்ட குடும்ப அட்டை களை கொண்ட நியாயவிலைக் கடைகளில் அதிகளவில் பொது மக்கள் அலைக்கழிக்கப்பட்டதால் விரக்தியடைந்தனர்.

இதுதொடர்பாக, கொடுங்கை யூர் எம்.ஆர்.நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் கூறும்போது, ‘‘தினமும் காலை 11 மணிக்கு மேல் தான் நியாயவிலைக் கடைக்கு பணம் வருகிறது. அன்றைய தினத் துக்கான தேவையை விட குறை வாகவே பணம் வருகிறது. அதனால் வரிசையில் கடைசியில் நிற்போரை திருப்பி அனுப்பி விடுகின்றனர். கடந்த இரு நாட்களாக திருப்பி அனுப்பப்பட்டு 3-வது நாளாக வரிசையில் நிற்கிறேன். வேலைக்கு சென்றிருந்தால்கூட நாளொன்றுக்கு ரூ.250 வீதம் ரூ.750 கிடைத்திருக்கும். ஜெயலலிதா இருந்தபோது, வெள்ள நிவாரண நிதியை, வங்கிக் கணக்கில் செலுத்தினார். அதேபோன்று வங்கிக் கணக்கில் இந்த பணத்தை செலுத்தி இருக்கலாம். ஏற்கெனவே ஆதார் விவரங்களை கொடுத்துதான் ஸ்மார்ட் குடும்ப அட்டையை பெற்றிருக்கிறோம். இந்நிலையில் ஸ்மார்ட் அட்டையும், ஆதார் அட்டையும் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று நிர்பந்திப்பது தேவையற்றது’’ என்றார்.

மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மத்திய அரசு செயல் படுத்தி வரும் நிலையில், பொங்கல் பரிசாக அரசு பணம் கொடுக்கிறது என்பதை பிரபலப்படுத்தவே இவ் வாறு வழங்குவதாகவும், பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தியிருந் தால் இந்த அலைக்கழிப்பு நேர்ந் திருக்காது என்றும் பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

இதுதொடர்பாக, உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரி யிடம் கேட்டபோது, ‘‘நிவாரணம் உள்ளிட்டவற்றை வழங்குவதற்காக அவ்வப்போது பொதுமக்களின் வங்கிக்கணக்கு கேட்கப்பட்டு, அதில் வரவு வைக்கப்படுகிறது. அதே போல் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், வேளாண் பயிர்கள் பாதிப்பு நிவாரணம் ஆகியவை, குறிப்பிட்ட தொகுதியினருக்கு அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும் ஒரே நேரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக் கையும் பெற்று அதில் பணத்தைச் செலுத்துவது சாத்தியமானதல்ல. சென்னை போன்ற நகரங்களில் நுகர்வோர் எளிதாக வங்கிக் கணக்கு விவரங்களை வழங்க மாட்டார்கள்’’ என்றார்.

பொங்கல் பரிசை வங்கிக் கணக்கில் செலுத்துவது தொடர் பாக பொதுத்துறை வங்கி அதி காரி ஒருவர் கூறும்போது, “தற் போது வங்கி கணக்குகள் மூலம் காஸ் மானியம், முதியோர் ஓய்வூ தியத் திட்டம் மற்றும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஆகிய வற்றுக்கு பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல், பொங்கல் பரிசுத் தொகை யையும் வங்கிகள் மூலம் வழங்கலாம். ஆனால், குடும்ப அட்டை வைத்துள்ள அனைவரது வங்கிக் கணக்குகளையும் உணவுப்பொருள் வழங்கல் துறையினர் வைத்திருந்தால் மட்டுமே வங்கிகள் மூலம் பணம் விநியோகம் செய்ய முடியும். மேலும், வயதானவர்கள், ஏடிஎம் பயன்படுத்தத் தெரியாதவர்கள் பலர் வங்கிக்கு வந்துதான் பணம் எடுப்பர். அதனால், வங்கியில் ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்’’ என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close