[X] Close

போலீஸ் கேன்டீனில் ஆன்லைனில் பொருள் வாங்கலாம்: காவலர்களின் வசதிக்காக புதிய ‘செல்போன் செயலி’அறிமுகமாகிறது - வடிவமைக்கும் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தகவல்


police-canteen

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 07:01 am
  • அ+ அ-

போலீஸார் இனி தங்களுக்கான சிறப்பு அங்காடியில் நேரில் சென்று பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்தாலே பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் ‘செல்போன் செயலி’ அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சலுகை விலையில் மளிகை உள்ளிட்ட பொருட்களை போலீஸார் பெறும் வகையில் தமிழகத்தில் மாவட்ட தலை நகரங்கள் உட்பட 47 காவல் சிறப்பு அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அனைத்து வகையான மளிகை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை 10 முதல் 40 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் போலீஸார் வாங்க முடியும். பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற காவல் பணியாளர்கள், தீயணைப்பு படை வீரர்கள், சிறைத் துறை பணியாளர்கள், காவல் துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள், வனத் துறையினர் ஆகியோர் இந்த அங்காடியை பயன்படுத்தலாம். தற்போது, 1 கோடியே 17 லட்சத்து 215 குடும்பங்கள் இந்த அங்காடியை பயன்படுத்தி வருகின்றன.

சென்னையை பொறுத்தவரை கொண்டிதோப்பு, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகம், பரங்கிமலை, ஆவடி ஆகிய 4 இடங்களில் இந்த வகையான காவல் சிறப்பு அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன.

போலீஸாருக்கு தொடர் பணிகள் ஒதுக்கப்படுவதால் நேரில் சென்று வாங்குவதில் பலருக்கு சிரமம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. எனவே, காலத்துக்கு தகுந்தாற்போல் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸார் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தற்போது காவல்துறை அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து டிஐஜி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "போலீஸார் ஆன்லைன் மூலம் தங்களுக்கான பொருட்களை வாங்கும் வகையில் செல்போன் ‘செயலி’ (APP) தற்போது வடிவமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும். முதல் கட்ட மாக சென்னையில் அறிமுகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது" என்றார். இந்த முயற்சிக்கு போலீஸார் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close