[X] Close

வீட்டுக்கடன் நிராகரிக்கப்பட 5 காரணங்கள்


housing-loan

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 14:39 pm
  • அ+ அ-

கே.வெங்கடசுப்ரமணியன்

வீட்டுக்கடன்களைப் பொறுத்த வரை, தொகை பெரியது என்ப தால், வங்கிகள் கடன் வழங்கு வதை உறுதிசெய்வதற்கு முன் உச்சகட்ட அளவிலான ஆய்வுகளை நடத்தும். இதனால் நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களுடைய விண்ணப்பம், ‘குறை வான கிரெடிட் மதிப்பெண்’ என்ற வழக்க மான காரணம் தவிர்த்து, பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு விடும். வீட்டுக்கடன் நிராகரிக்கப்படுவதற் கான முக்கிய மற்றும் பெரிதாக கவனத் தில் கொள்ளாத 5 காரணங்களை இங்கே பார்க்கலாம்.

அதிகபட்ச மாத தவணை

பொதுவாக, உங்களுடைய வருமானத்தில் நீங்கள் செலுத்தப் போகும் மாத தவணை போக மீதமுள்ள தொகை அதிகமாக இருக்கும் போது, வங்கிகள் கடன் வழங்க தயாராக இருக்கின்றன. அதாவது உங்களுடைய நிகர வருமானத் தில் 35-40 சதவீதத்துக்கு மேல் மாத தவணை இருக்கக் கூடாது.

ஆனால், நீங்கள் கூடவே கடன் அட்டை, தனிநபர் கடன் மற்றும் கல்விக்கடன் என வரு மானத்தில் பெரும் தொகையைக் கடனைத் திருப்பிச் செலுத்த பயன் படுத்திக்கொண்டிருக்கிறீர்கள் எனில், உங்களுடைய மாத தவணை வருமானத்தில் 80-90 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம். இப்படி வரு மானத்தில் அதிகபட்சம் மாத தவணைக் குச் செல்லும்பட்சத்தில் நீங்கள் திவால் ஆகும் வாய்ப்பு உள்ளதால் வங்கிகள் கடன் வழங்க மறுக்கலாம்.

தொடர் வேலை மாற்றம்

வருமானத்தை அதிகப்படுத்தவும், புதிய வாய்ப்புகளைத் தேடியும் இன் றைய கால இளைஞர்கள் அடிக்கடி வேலை மாறுவதை வழக்கமாகக் கொண் டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக் கைகள் உங்களுடைய வருமானத்தை வேண்டுமானால் உயர்த்தலாம், ஆனால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரை, அடிக்கடி வேலை மாறுபவர்ளுக்குக் கடன் வழங்க யோசிப்பார்கள்.

ஏனெனில் இதுபோன்ற பழக்கம் உள்ளவர்கள் திடீரென்று வேலை வாய்ப்பை இழக்க நேர்ந்தால், திவால் ஆகும் வாய்ப்புள்ளது அல்லவா?

எனவே, கடன் வழங்குவதற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் நீங்கள் குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தில் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் நிலையாக வேலை பார்த்திருக்கிறீர்களா என்று பார்க்கின்றன. தனிநபர் அடிப்படையில் பார்த்தாலும் கூட, நிலையாக ஒரு இடத்தில் வேலை புரிவதன் மூலம் நம்மால் நம்முடைய பணப்புழக்கத்தை நிலையாக வைத்திருந்து, நம்முடைய உபரி தொகையைச் சரியாக நிர்வகிக்க உதவியாக இருக்கும்.

கூட்டு விண்ணப்பதாரரின் மோசமான வரலாறு

இது பெரும்பாலும் கவனத்துக்கு வராத காரணம். நீங்கள் வீட்டுக்கடனை கூட்டாக சேர்ந்து விண்ணப்பிக்கிறீர்கள் எனில், விண்ணப்பிக்கும் இருவருடைய கடன் திருப்பிச் செலுத்தும் வரலாறுமே வலுவாக இருக்க வேண்டும். யாரேனும் ஒருவருடைய கடன் வரலாறு மோசமாக இருந்தாலும் அல்லது ஏற்கெனவே அதிகளவு கடன் வாங்கியிருந்தாலும் உங் களுடைய கடன் விண்ணப்பம் நிராகரிக் கப்பட வாய்ப்புள்ளது. அப்படியே கடன் வழங்கப்பட்டாலும், கடன் தொகை நீங்கள் கேட்டதை விட குறைவாகவே இருக்கும்.

மேலும் நிதி நிறுவனங்கள் சில கூட்டு விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன. பொதுவாக பெற்றோர்-இளம்பருவ மகன், கணவன் -மனைவி, பெற்றோர்-திருமணமாகாத மகள் (வாங் கும் வீடு மகள் பெயரில் இருக்க வேண்டும்), சகோதரர்கள் ஆகிய கூட்டு விண்ணப்பங்களை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றன. துரதிர்ஷ்டவசமாக சகோ தரிகள், நண்பர்கள் மற்றும் சகோதரர்- சகோதரி ஆகிய கூட்டு விண்ணப் பங்களை நிராகரித்துவிடுகின்றன.

திவால் ஆனவர் வீட்டில் குடியிருத்தல்

நீங்கள் கடன் பெறுவதற்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருக் கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் - நல்ல கிரெடிட் மதிப்பெண், போதுமான அளவு வருமானம், நல்ல கடன் வரலாறு அனைத்தும் இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீங்கள் ஏற்கெனவே கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் திவால் ஆனவர் வீட்டில் தங்கியிருந்தால், உங்களுக்கு வீட்டுக் கடன் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏனெனில், ஏற்கெனவே திவால் ஆனவரின் முகவரியை வங்கிகள், நிதி நிறுவனங்கள் தடுப்புப் பட்டியலில் சேர்த்துவிடுவார்கள். அந்த முகவரியில் யாரேனும் தங்க நேர்ந்தால், என்னதான் அவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், விளைவுகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். வங்கியாளர்களை அணுகி பேச்சுவார்த்தை நடத்தி கடனைப் பெறுவதற்கு முயற்சிக்கலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்த நடைமுறைகளால் நேரம் விரயமாவதும், கடினமானதும் ஆகும்.

சொத்து தொடர்பான சிக்கல்கள்

நீங்கள் வாங்கப் போகும் வீடு சில சமயங்களில் வங்கிகளால் அங்கீகரிக்கப் படாமல் இருந்தால் உங்களுடைய வீட்டுக் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். சில சமயங்களில் குறிப்பிட்ட பில்டர் நிதி நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம். அல்லது, குடியிருப்பு அல்லது சொத்து தொடர்பான ஆவணங் களில் தவறுகள் இருக்கலாம். தேவை யான அரசு அமைப்புகளின் அங்கீகாரம், ஒப்புதல் இல்லாமல் இருந்தாலும் கடன் மறுக்கப்படலாம்.

வீட்டுக்கடன் விண்ணப்பிக்கும் போது இவற்றையெல்லாம் கவனத் தில் எடுத்துக்கொண்டால் கடன் விண்ணப் பம் நிராகரிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close