[X] Close

பொம்மை படத்தின் டைட்டில் கார்டு!- படம் பழசு ஸ்டைல் புதுசு


bommai-film-title-card

  • பாரதி ஆனந்த்
  • Posted: 04 Jan, 2019 13:58 pm
  • அ+ அ-

தமிழ்த் திரையுலகில் பொம்மை என்றவுடன் நமக்கு எல்லாம் நினைவுக்கு வருவது நீயும் பொம்மை.. நானும் பொம்மை என்ற பாடல்தான்.

ஆனால், அண்மையில் ஃபேஸ்புக்கில் உலாவும்போது நான் கண்டுகொண்ட முத்தான வீடியோ பொம்மை மீதான ஈர்ப்பை அதிகரித்திருக்கிறது. இதுவரை அந்தப் படத்தைப் பார்க்கவில்லை என்பதால் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. அந்த வீடியோவைப் பற்றி எழுத வேண்டும் எனத் தோன்றக் காரணம் தமிழ் சினிமாவினர் செய்யும் அமர்க்களங்கள்.

டீஸர், ட்ரெய்லர், லிரிக்கல் வீடியோ, சிங்கிள்ஸ், அப்புறம் லிரிக்கல் வீடியோவாக வெளியிட்ட பாடல் காட்சி வீடியோவாக இப்படி ஒரு படம் வெளியாவதற்கு முன்னதாகவும் அதற்குப் பின்னதாகவும் படக்குழுவினர் செய்யும் அமர்க்களங்களுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராக உள்ள பேட்ட, விஸ்வாசம் ட்ரெய்லரை ஒப்பீட்டுப் பார்வை எல்லாம் வேறு எழுதுகிறார்கள். இதற்கு அது பதிலா இல்லை அதற்கு இது சவாலா என்ற விவாதங்கள் வேறு. இதெல்லாம் ஒருபுறம் என்றால் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் சண்டை மறுபுறம்.

இந்தச் சூழலில் பொம்மை படத்தின் டைட்டில் கார்டு பார்க்கும்போது அமர்க்களங்களில் இருந்து விடுபடும் ஆறுதல் தந்தது. ஒரு படத்தைப் பார்க்கும் ஆவல் இயல்பாகவே வர வேண்டும். அது ஸ்டார் வேல்யூவோ அல்லது டைரக்டர் மீதான ஈர்ப்போ அது இயல்பாக நடைபெற்று திரை முன் அமரும்போது படத்தின் மீது அபிமானம் கூடும்.

டீஸர், ட்ரெய்லரை வைத்தே இதுதான் கதையாக இருக்குமென்று ஆளுக்கொரு கதை சமூகவலைதளங்களில் பலரும் எழுத அதை நாம் படிக்க அதில் ஏதாவது ஒன்று திரையில் நாம் பார்க்கும் படத்தோடு ஒத்துபோனால் புதிய மொந்தையில் பழைய கள் போன்ற அனுபவமே மிஞ்சும். 

இது தனிப்பட்ட கருத்தே. இதை மறுத்தலிக்க ஆயிரமாயிரம் வாதங்கள் முன்வைக்கப்படலாம். அது பற்றி கவலையில்லை. இந்த அமர்க்களங்களுக்கு இடையே நண்பர் ஒருவர் பகிர்ந்திருந்த பொம்மை டைட்டில் கார்டைப் பற்றி பார்ப்போம். முதலில் அந்த வீடியோவைப் பார்ப்போம்.


பார்த்துவிட்டீர்களா? அந்தக் காலத்திலேயே நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரையும் அறிமுகம் செய்த இயக்குநரின் திறமையும் அந்த வர்ணனையும் பிரமாதப்படுத்தியிருந்ததுதானே. இந்தக் கதைய நான் தான் எழுதினேன்னு அவர் தந்த ஒரு வரி அறிமுகம் க்ளாஸ்.

அப்புறம் ஜேசுதாஸின் இளமைப் பருவ காட்சியைப் போர்க்கும்போது சினேகம் ஏற்படும். தெய்வீகக் குரலால் எண்ணற்ற உள்ளங்களைக் கொள்ளை கொண்டவரின் அறிமுகம் அது.

படத்திற்காக உழைத்தவர்களை பொம்மையாக கருதாமல் அவர்கள் இல்லாமல் படமில்லை என்பதை இதைவிட யாரும் சிறப்பாக கவுரவிக்க இயலாது என்றே தோன்றியது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close