[X] Close

பர்ட் பாக்ஸ் சேலஞ்ச்!- நெட் ஃபிளிக்ஸ் வாயிலாக எழுந்துள்ள புதிய அச்சுறுத்தல்


don-t-try-this-at-home-netflix-warns-fans-off-of-bird-box-challenge

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jan, 2019 09:37 am
  • அ+ அ-

இணையம் அவ்வப்போது மனித குலத்துக்கு சில உயிர் சவால்களை விடுக்கிறது. ப்ளூவேல் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறது பர்ட் பாக்ஸ் சேலஞ்ச். இந்த புத்தாண்டின் முதல் இணைய சேலஞ்ச் என இதைக் கருதலாம்.

நெட் ப்ளிக்ஸ் என்பது இணையதள வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை. இது ஓர் அமெரிக்க நிறுவனம். இந்த சேவை மூலம் திரைப்படங்களை ஹெச்.டி தொழில்நுட்பத்தில் ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் பார்க்க முடியும். இந்த தளம் நெட்ஃப்ளிக்ஸ் சீரியல்களையும் ஒளிபரப்புகிறது. பல முன்னணி நடிகர், நடிகைகள் கூட நெட் ஃப்ளிக்ஸ் தொடர்களில் நடிக்கின்றனர். 

அந்த வகையில் பர்ட் பாக்ஸ் 'Bird Box' என்றொரு நெட்ஃப்ளிக்ஸ் தொடர் பிரபலமாகியிருக்கிறது.

பர்ட் பாக்ஸ் ஒரு சைக்கலாஜிக்கில் த்ரில்லர். சூசன் பியர் இதனை இயக்கியுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக் இதில் நடித்திருக்கிறார். 

இந்தத் தொடரின்படி அனைத்து மனிதர்களும் தங்கள் கண்களைக் கட்டிக்கொண்டுதான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் ஒரு மர்ம சக்தி மனிதர்களை ஆட்கொண்டு அவர்களை தற்கொலைக்கு தூண்டிவிடும். இதனால், எல்லோரும் கண்களைக் கட்டிக் கொண்டே வாழ்கின்றனார்.
படத்தின் நாயகி சாண்ட்ரா புல்லக் தனது பிள்ளைகளை ஆபத்திலிருந்து கண்களைக் கட்டியவாறே எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

விறுவிறுப்பாக செல்லும் இந்த த்ரில்லர் தொடரைப் பார்த்து பலரும் தங்கள் அன்றாட வேலைகளைக் கண்களைக் கட்டிக் கொண்டு செய்ய முற்படுகின்றனர். இதற்கு பர்ட் பாக்ஸ் சேலஞ்ச் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சவாலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் வேண்டுகோள்:
இந்த சவால் மிகவும் ஆபத்தானது என்பதால் நெட்ப்ளிக்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு ட்விட்டர் வாயிலாக ஒரு கோரிக்கை வைத்திருக்கிறது.

அதில், "இப்படி ஓர் எச்சரிக்கை விடுக்கும் சூழல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் சொல்கிறோம். பர்ட் பாக்ஸ் சேலஞ்ச் மூலமாக உங்களை நீங்களே காயப்படுத்திக் கொள்ளாதீர்கள். இது எங்கு எப்படி ஆரம்பித்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் தொடருக்கு நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி ஆனால், 2019-ல் நீங்கள் ஆபத்தான சவாலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என வேண்டுகோள் விடுத்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close