[X] Close

தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்து ஓராண்டு நிறைவு: தலைவன்’ டிராக்கில் இருந்து மாறும் ‘நாயகன்’ ரஜினி


rajini-special

  • kamadenu
  • Posted: 31 Dec, 2018 07:30 am
  • அ+ அ-

ம.மோகன்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் கடும் பனிப்பொழிவு. இதனால், தற்போதைய பயணத்தில் பெரிதாக நகர்வலம் இன்றி, தங்கியுள்ள அறையிலேயே ஓய்வு, குடும்பத்தினருடன் உற்சாகமாக உரையாடல் என பொழுதுகளை நிதானமாக செலவிட்டு வருகிறார் ரஜினிகாந்த்.

2017-ன் இதே நாளில் (டிச.31) சென்னை ராகவேந்திரா மண்டபத் தில், ‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டப்பேரவை தேர் தலில் தமிழகத்தின் 234 தொகுதி களிலும் வேட்பாளர்கள் நிறுத்தப் படுவர்’’ என்று கூறி, ரசிகர்களை பெரும் கொண்டாட்டத்துக்கு ஆட் படுத்தினார். சொல்லி ஓராண்டு ஆகிறது. ஆனால், தற்போது ‘பேட்ட’ படத்தின் டிரெய்லர் வாயிலாக அவர்களை உற்சாகத் துக்கு தள்ளியிருக்கிறார்.

சமீபகாலமாகவே ரஜினி அளிக்கும் பேட்டிகளும் அவரது அரசியல் பயணத்துக்கு நங்கூரம் பாய்ச்சுவதற்கு பதிலாக,அந்தக் கப்பலில் இருந்து அவர் இறங்க வழிதேடுவதாகவே தெரிகிறது.

அதோடு, ரஜினி இல்லாமலே திடீர் திடீரென மாநில தலைமை மன்றத்தில் கூட்டம் என்ற அறிவிப்பும் மாவட்ட நிர்வாகிகளை குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

ரஜினியின் நெருக்கமான அரசியல்ஆலோசகர் ஒருவர் கூறும்போது, ‘‘ஜெயலலிதாவுக்கு பிறகு பொறுப்பேற்ற அதிமுக அரசு இன்னும் எத்தனை மாதங்கள் தாக்குப் பிடிக்குமோ தெரியாது. ஒருவேளை அரசு ஆட்டம் கண்டால், தேர்தல் வரும். அதில், தற்போதைய அதிமுக முக்கிய புள்ளிகள் சிலர் ரஜினி பக்கம் வருவார்கள். மத்திய அரசின் ஆதரவையும் சேர்த்துக்கொண்டு சட்டப்பேரவை தேர்தலில் குதிக்கலாம். இதுதான் 2017 இறுதியில் ரஜினியின் வியூகமாக இருந்தது. இந்த ஓராண்டில் அரசியல் காட்சிகள் மாறியுள்ளன. பிப்ரவரி இறுதிக்குள் மீண்டும் அந்த நிலை வர வாய்ப்பு உள்ளது. அப்படி நடக்கும்போது ரஜினியின் திட்டத்தை பாருங்கள்’’ என்றார்.

2018 தொடக்கத்தில் ரஜினியிடம் காணப்பட்ட அரசியல் வேகம் 2018 இறுதியில் இல்லை. மாறாக, நீண்ட இடைவேளைக்குப் பிறகு சுறுசுறுப்பான, துறுதுறுப்பான இளம் நாயகன்போல தொடர்ச்சி யாக நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ரசிகர்கள் விரும் பும் கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறார். தனது ரசிகனுக் கான ரஜினியாக மாறத் தொடங்கி யிருக்கிறார். ‘தலைவன்’ டிராக்கில் இருந்து ‘நாயகன்’ டிராக்குக்கு மீண்டும் மாறியிருக்கிறார்.

ரஜினியின் இந்த மாற்றம்அவரது சாமானிய ரசிகனிடம் பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. சினிமாவோ, அரசியலோ சமகால ஓட்டத்தில் ரஜினி ஏதாவது ஒன்றில் தீவிரமாக இருந்தாலே போதும் என்பதுதான் அவரது ரசிகர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. ‘போர் வந்துவிட்டதாக ரஜினி சொன்னால் களத்தில் குதித்துக் கொள்ளலாம்’ என்ற எண்ணத்தில் ‘தலைவா பராக்’ என ‘பேட்ட’ படத்துக்கு கட்அவுட் அடிப்பதில் அவர்களும் பிஸியாகிவிட்டனர்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close