[X] Close

ஒளி படைத்த கண்ணினாய் வா… வா… வா… 


brightness-eye-come-come

  • சரவணன்
  • Posted: 27 Dec, 2018 09:09 am
  • அ+ அ-

- டாக்டர் சுஜாதா மோகன், M.B.B.S., D.O., M.Ch., FRCS., FACS.,

பாரம்பரியமிக்க மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் பிரபல கண் மருத்துவர் டாக்டர் சுஜாதா மோகன். கடந்த 30 ஆண்டுகளாக கண் மருத்துவத் துறையில் சிறப்பான பங்களிப்பைச் செய்து வருபவர். காலத்திற்கேற்ப கண் மருத்துவத்தில் புதிதாக மாறிவரும் அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றியும் நவீன லேசிக் அறுவை சிகிச்சை முறை பற்றியும் ஆர்வத்தோடு பேசும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து:

சந்திப்பு : மு.முருகேஷ்

எல்லா உயிர்களுக்கும் பார்வை மிகவும் அவசியம். பார்வை குறைபாடு என்பது எந்த வயதிலும் வரலாம். கண்களை முறையாகப் பராமரிக்காமல் இருத்தல், கண்களில் ஏற்படும் சிறு பிரச்சினைகளுக்குக்கூட உரிய மருத்துவர் ஆலோசனையின்றிக் கண்களில் ஏதாவது சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துதல் போன்ற பல்வேறுபட்ட காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. பார்வையில் லேசான குறைபாடுகள் தெரியத் தொடங்கியதுமே, கண் மருத்துவரைச் சந்தித்து முறையான ஆலோசனைகளைப் பெற வேண்டும். கிட்டப் பார்வை, தூரப் பார்வை, சிதறல் பார்வை ஆகிய குறைபாடுகளைக் கண்டறிந்து, முறையான சிகிச்சை பெற வேண்டியது மிகவும் அவசியம்.

இன்றைக்கு பார்வை குறைபாடு பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் கண் பார்வை பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பிறகே, மருத்துவரை நாடி வருவார்கள். ஆனால்., இன்றைக்கு ஒரு குழந்தையின் பெற்றோர் இருவரும் கண்ணாடி அணிபவராக இருந்தால், தங்கள் குழந்தையை அழைத்து வந்து, தங்கள் குழந்தைக்கும் பார்வை குறைபாடு வர வாய்ப்புள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்கிறார்கள். மேலும், முன்பெல்லாம் பள்ளியில் சரிவர படிக்காத மாணவனைப் பார்த்து, ‘மக்கு’ என்று சொல்வார்கள், ஆனால், இப்போதெல்லாம் ஒரு மாணவன் படிக்க சிரமப்பட்டால், அவனது பார்வையில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்று ஆசிரியர்களே கண் பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்துகிறார்கள்.

இன்றைய குழந்தைகளின் கைகளுக்கு அறிவியல் சாதனங்கள் மிக எளிதாகக் கிடைத்து விடுகின்றன. செல்போன், ஐ-பேடு உள்ளிட்ட கருவிகளைக் கண்களுக்கு மிக அருகில் வைத்து, அதை வெகுநேரம் பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மிக அருகில் அமர்ந்து பார்க்கிறார்கள். இதனால் சிறு வயதிலேயே அவர்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தற்போது பார்வை குறைபாடு உடையவர்கள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது.

கண் பார்வை குறைபாட்டைப் போக்க, கண் கண்ணாடிகளை அணிந்துகொள்வது, கான்டாக்ட் லென்ஸ் பொருத்திக் கொள்வது போன்ற முறைகளைத்தான் பயன்படுத்தினர். தற்போது ஏற்பட்டுள்ள நவீன தொழில்நுட்பம் கண் கண்ணாடிகளை அணியாமலேயே பார்வைத் திறன் பெற முடியும் என்று நிரூபித்திருக்கிறது.

கண் கண்ணாடிகளை அணிவதில் இயல்பாகவே வேறு பல சங்கடங்களும் உள்ளன. காலையில் எழுந்ததுமே ‘கண்ணாடி எங்கே’ என்று தேடுவதே வேலையாக இருக்கும். மனதிற்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாடுவதிலும் சிரமங்கள் ஏற்படும். கண்ணாடி அணிவதால் மூக்கின் மீது தழும்பு உண்டாகும். இப்படியான அசெளகரியங்களைத் தவிர்க்கவே, இப்போது புதிய முறையிலான லேசிக் (LASIK) அறுவை சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. 

தமிழகத்தைச் சேர்ந்த சயன்டிஸ்ட் ஸ்ரீனிவாசன் கண்டுபிடித்த இந்த முறையை டாக்டர் ட்ரோக்கல் அறிமுகப்படுத்தினார். சிறிதும் வலியே இல்லாமல், கத்தியைப் பயன்படுத்தாமல் கண் பார்வைக்கு உத்திரவாதம் அளிக்கிறது இந்த லேசிக் முறை சிகிச்சைக்கு வருபவரை மயக்க நிலையில் ஆழ்த்தி, கருவிழியில் திசுக்களைப் பயன்படுத்தி மெலிதான, வட்ட வடிவ மடல்(ப்ளாப்) மூலம் ஃபெம்ட்டோ செகண்ட் லேசர் என்பதை அறுவை சிகிச்சை மருத்துவர் பயன்படுத்துவார். எக்சிமர் லேசர், விழித்திரைக்கு மறுவடிவம் கொடுக்க நுண்ணிய திசுக்களை நீக்கி, பார்வையில் தேவைப்படும் மாற்றத்தை ஏற்படுத்துவார்.
கிட்டப்பார்வை கொண்டவர்களுக்கு கருவிழியைச் சமநிலைக்குக் கொண்டுவர (Flatten) லேசர் பயன்படுத்தப்படும்.

தூரப்பார்வை உள்ளவர்களுக்கு செங்குத்தான நிலை உள்ள (Steeper) உருவாக்கப்படும். சிதறல் பார்வை உடையவர்களுக்கு முறையற்ற நிலையில் உள்ள கருவிழி, இயல்பான வடிவத்திற்கு மாற்றப்படும். இதற்குப் பிறகு, இறுதியில் ஃபிளாப்பை, அதனுடைய இடத்திலேயே மீண்டும் பொருத்தி விடுவோம். ஒரே நாளில் முடிந்துவிடக்கூடிய இந்த எளிய லேசர் அறுவை சிகிச்சையை செய்துகொண்ட பிறகு, கண்ணாடிகளையோ, கான்டாக்ட் லென்ஸ்களையோ தேடிச்செல்ல வேண்டிய அவசியமில்லை.

லேசிக் அறுவை சிகிச்சையை செய்துகொள்ள விரும்புவர்கள், 18 வயது முடிந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். கண் மருத்துவர் பரிந்துரையின் பேரில் 2 அல்லது  3 ஆண்டுகள் கண் கண்ணாடியோ, கான்டாக்ட் லென்ஸ்ஸையோ உபயோகித்தவராக இருத்தல் வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த லேசிக் அறுவை சிகிச்சை மூலம் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சிறந்த முறையில் பயனடைந்திருக்கிறார்கள். இந்த முறையில் அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என்கிற எண்ணத்தில், சிறப்பு சலுகையொன்றை ராஜன் ஐ கேர் அறிவித்துள்ளது. அனைத்து வகையான பரிசோதனைகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு மொத்த கட்டணத்திலிருந்து 35 சதவீத கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, கண் கண்ணாடிகளுக்கு குட் பை சொல்லுவோம்.

ஒளி படைத்த கண்களோடு இந்தப் பூமியில் நாம் விரும்பிய வாழ்வை வாழ்வோம்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close