[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 20 - கெமிஸ்ட்ரி


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 18 Aug, 2018 11:58 am
  • அ+ அ-

“இவரு ரவி. இனிமே இவர் தான் நம்ம கம்பெனி அக்கவுண்ட்ஸ் எல்லாத்தையும் பார்த்துப்பாரு” என்று ஒருவரை ராமராஜிடம்,  திருப்பூர் மணி அறிமுகப்படுத்தினார்.

ரவி சற்றே குட்டையாய் இருந்தான். கண்களில் ஏதோ ஒரு சோகம் அப்பியிருக்க, திருப்பூர் மணியை அவன் பார்த்த பார்வையில் நெருக்கம் இருந்தது.

“நம்ம செட் நண்பன். எக்ஸ்போர்ட் ஆர்டர் எடுத்துக் கொடுத்திட்டிருந்தான். பெருசா நஷ்டப்பட்டுட்டான். இப்ப கொஞ்சம் கஷ்டக்காலம் அதான் நம்ம கம்பெனியில கூட்டிட்டி வந்திருக்கேன். இவருக்கும் கொஞ்சம் தொழில் சொல்லிக் கொடுங்க. சட்டுனு பிடிச்சிப்பான்” என்று ரவியின் தோளை ஆதரவாய் அணைத்தபடி பேசினார் மணி.

“எதுக்கு இதெல்லாம் சொல்லிட்டு?” என்று ரவி சொல்லும் போது அவன் குரலில் நெருக்கத்துடன் ஒரு அழுத்தம் இருந்தததை ராமராஜ் கவனித்தார்.

“ஒரு படம் எடுக்க எத்தனை செலவாகும்?.எப்படி வருமானம் வரும்? யார் யார் எவ்வளவு சம்பளம் வாங்குவாங்க?எல்லா நடிகையும் ப்ரோடியூசர் கூப்டா மட்டும்தான் வருவாளுங்களா? எவ எவ எவ்வளவு வாங்குவா? ஒரு படத்துக்கு இந்த மாதிரி வேலை செய்தா சம்பளமா எவ்வளவு கிடைக்கும்?’ என ரவியிடம் நிறைய கேள்விகள் இருந்தது.

எல்லாமே விதண்டாவாதமாய், நல்லவிதமாய் இல்லை. இவர் எப்படி மணியை காப்பாற்றப் போகிறார்? என்று ராமராஜுக்கு புரியவில்லை. எது எப்படியோ நண்பர்களுடய உறவில் இந்த வேலை நிச்சயம் பெரிய மாற்றத்தை கொடுக்கப் போகிறது என்று ராமராஜுக்கு புரிந்தது.

“இருங்க..இருங்க.. மெல்ல எல்லாத்தையும் கத்துக்கலாம் பார்க்கலாம் .சினிமா எங்கேயும் போயிராது. மொதல்ல இன்னைய அஸிஸ்டெண்ட் பேட்டா பில் இது. முத பேமெண்டா இதக் கொடுங்க பார்ப்போம்” என்று சின்ன துண்டு பேப்பரில் எழுதிக் கொடுத்தவரை ஒரு முறை ஆழமாய் பார்த்துவிட்டு, பையிலிருந்த நோட்டுக் கட்டுக்களில் இருந்து பணத்தை ஒன்றுக்கு நாலு முறை எண்ணிக் கொடுத்தான் ரவி.

*******************************

”ராமராஜ் சார் கதை சொன்னாரு. செம்மையா இருந்துச்சு. கொஞ்சம் ஓல்ட் ஸ்டைல் கதையா இருந்தாலும் டெப்தா இருந்துச்சு.

என்ன கொஞ்சம் லவ் சீன்ஸ் எல்லாம் இண்டென்ஸா இருக்குதுறதுனால உங்க ரெண்டு பேர் கெமிஸ்ட்ரி இன்னும் நல்லா ஒர்க்கவுட் ஆகணும்னு சொல்லிட்டேயிருக்காரு. நம்மளுக்குள்ள அவ்வளவு கெமிஸ்ட்ரி இருக்கா என்ன?” என்று கேட்ட நித்யாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ராம்.

கண்கள் பளபளவென கனவாய் இருந்தது. அவளுக்கு முன் பெரிய நட்சத்திர அந்தஸ்து இருப்பதை அவளால் உணர முடிந்தது. ராம் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தை பார்க்க, ஒரு மாதிரி உறுத்தலாய் இருக்க, “என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேன்குறே? டூ வி ஹேவ் எனி கெமிஸ்ட்ரி? ” என்று மீண்டும் கேட்டுவிட்டு சிரித்தாள்.

“அதையேத்தான் கேட்குறேன் நானும்” என்றான் ராம்.

சிரித்துக் கொண்டிருந்தவளின் முகம் சட்டென மாறியது. “எங்கப்பா அம்மாவுக்கு அப்புறம் நான் டிபண்ட் பண்ணி, எல்லாத்தையும் ஷேர் பண்றது உன்கிட்ட மட்டும்தான் தெரியுமா? டெய்லி உன்னை பார்க்க முடியாட்டாலும், உன் கிட்ட பேசினப்புறம் தான் மை டே கம்ஸ் டு எண்ட்.

என்னோட இழப்பு, அப்போ நீ காட்டுன கேர், கன்சர்ன் எல்லாமே எனக்கு பிடிச்சிருந்தது. ஐயம் கம்பர்டபிள் வித்யூ வெரி மச். அதையெல்லாம் விட உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்றதுதானத்தான் என் ராத்திரி நேர ஒப்பித்தல் எல்லாத்தையும் இத்தனை நாள் பொருத்துக்குறனு நினைக்கிறேன். இல்லையா?” என்று மீண்டும் அவன் முகம் பார்த்தாள்.

ராமின் கண்களில் அவளின் உருவம் நெருக்கமாய் தெரிவதை அவள் பார்த்தாள்.

தன்னையே கண்ணாடியில் பார்பது போல உணர்ந்தாள் நித்யா. ராம் தன் கண்களை கொட்டாமல் அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் முகத்தை கைகளில் ஏந்தினான்.

நித்யாவின் உடலில் லேசான பரபரப்பு தொற்றி கொண்டது. தன் முகத்தை இன்னும் நெருக்கமாய் அவனிடம் கொண்டு போனாள்.

“நமக்குள்ள கெமிஸ்ட்ரி இருக்கானுதானே கேட்டே?”என்று சொல்லியபடியே முத்தமிட்டான்.

நித்யா கண்களை மூடிக் கொள்ள, அரைக்கண்ணில் அவளை பார்த்தபடி மெல்ல அவளை தன்னோக்கி இழுத்து, அணைத்தபடி இன்னமும் ஆழுத்தமாய் முத்தமிட்டான்.

அவளின் உடல் முழுவதையும் அவனின் இறுக்கம். மார்பு படபடப்பதை இருவரும் உணர்ந்தார்கள். ஒரு கை அவளின் முதுகை அழுத்திக் கொண்டிருக்க, இன்னொரு கை அவளின் பின்பக்கத்தை அழுத்த, அவர்களின் முத்தம் சற்றே நீண்டு கொண்டேயிருந்தது. 

மாடியின் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் சட்டென இருவரும் விலகி, அவரவர் சீட்களில் உட்கார்ந்தார்கள். ராமின் அம்மா நின்று கொண்டிருந்தாள். “டிபன் அனுப்பட்டுமான்னு இல்லை கீழ வரியான்னு ? வாட்சப் பண்னியிருந்தேனே பாக்கலையா?” என்று கேட்டாள்.

“நாங்க வர்றோம் நீ போம்மா”

ராமின் அம்மா கிளம்பிப் போனவுடன், சட்டென மீண்டும் நித்யாவை அணைத்து மாறி மாறி முத்தமிட்டுவிட்டு, நித்யாவை அணைப்பில் வைத்தபடி அவளின் முகத்தை கைகளில் ஏந்தி, “கெமிஸ்ட்ரி எல்லாம் நல்லாத்தான் இருக்கு. பட் நான் உன் கூட இந்த படத்துல நடிப்பேனான்னு தெரியலை” என்ற ராமை அதிர்ச்சியோடு பார்த்தாள் நித்யா.

*******************************

”சார். அடுத்த வாரம் போட்டோ ஷூட்டுக்கு ஏற்பாடு பண்ணிரலாம் சார்.  ஹீரோ, ஹீரோயின் ரெண்டு பேரும் ரெடி. ஷூட் முடிஞ்சுதுன்னா பர்ஸ்ட் லுக் ரெடி பண்ணி டிவிட்டர், பேஸ்புக்குல ட்ரெண்டிங் பண்ணிருவோம் சார். அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு அக்கவுண்ட் எப்பில ஓபன் பண்ணனும் “ என்றான் பத்ரி.

“இருக்குற அக்கவுண்டுக்கே பணம் போட வக்கில்ல இதுல எப்.பியாம் அக்கவுண்டாம்” என்ற ராமாராஜை கோபமாய் பார்த்தான் பத்ரி.

“சார்.. இன்னைக்கு நீங்க எடுக்குற படத்த மொத நாள் தியேட்டர்ல போய் பாக்குறவங்க யங்ஸ்டர்ஸ். 20-35க்குள்ள இருக்குறவங்கதான். அவங்க அதிகமா புழங்குற இடம் சோஷியல் மீடியா.

நீங்க ஆயிரம்தான் பேப்பர், டிவி விளம்பரம் எல்லாம் கொடுத்தாலும் ஹைஃப்ங்கிறது ஷோசியல் மீடியா மட்டும்தான் அதுல விளம்பரம் இல்லைன்னா கஷ்டம்தான் சார்.” என்ற பத்ரியின் குரலில் ஆதங்கம் நிறைய இருந்தது.

ராமராஜ் அவனின் குரலில் இருந்த உண்மையை உணர்ந்தார். “சரிடா தம்பி.. அந்த அக்கவுண்டை ஓப்பன் பண்ணி எனக்கு சொல்லிக் கொடு. இந்த ஷோஷியல் மீடியா பூராவையும் நீயே பார்த்துக்க” என்றார்.

பத்ரி எகிறி குதித்து “தேங்க்ஸ் சார்.. தேங்க்ஸ் சார். இன்னைக்கே ஆன்லைன் ப்ரோமோ டீம் சுரேஷை கூப்பிட்டிருறேன் சார். அந்த டீம் முழுக்க நம்ம பசங்கதான். நான் வேலை செய்யுற படம்னா நிச்சயம் இன்னும் இண்ட்ரஸ்டா வேலை செய்வாங்க.” என்று உற்சாகமாய் போனை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

“சுரேஷ் ப்ரோ.. நம்ம படத்து ப்ரோமோஷன் பத்தி பேசணும். கொஞ்சம் ஆபீஸ் வர்றீங்களா?” என்று போனில் சுரேஷை அழைத்தான் பத்ரி.

*******************************

காபி ஷாப் அமைதியாய் இருந்தது. கிட்டத்தட்ட மூடும் நேரம் என்பதால் ஆட்கள் எல்லோரும் கிளம்பியிருக்க, ஸ்ரீதரும், ப்ரேமியும் மட்டுமே இருந்தார்கள். சற்றே தூரத்தில் அவளின் சித்தி உட்கார்திருந்தாள். அவளின் முன் ஏகப்பட்ட காலி ப்ளேட்டுகள் டேபிள் முழுவதும் நிரம்பியிருந்தது.

“இப்ப என்ன சொல்றே? நடிக்க மாட்டேன்னா? இல்லை படுக்க மாட்டேன்னா?” என்று கேட்ட ஸ்ரீதரின் குரலில் எரிச்சல் இருந்தது. அவன் கேள்வியில் உள்ள எரிச்சல் புரிந்தாலும், அதை வெளிக்காட்டாமல் அமைதியாய் ஸ்ரீதரைப் பார்த்தாள் ப்ரேமி.

“உண்மையில சொல்லப் போனா நடிக்கிறது பிடிச்சுத்தான் இங்க வந்தேன். பட் எல்லாரும் நடிக்கிறத விட படுக்குறதப் பத்தித்தான் பேசுறாங்க. பெரிய பேக்கப் இல்லாம ஆபீஸ் ஆபீஸா போய் வாய்ப்பு தேடுற என்னைப் போல நடிகைகளை பார்க்குற பார்வையோட பவரை உன்னால ஃபீல் பண்ண முடியாது.

அப்படி படுத்துத்தான் வாய்ப்பு வாங்கியிருக்கணும்னா பத்து படத்துலயாவது நடிச்சிருப்பேன். ஒரு பக்கம் என் சித்தியோட டார்சர். இன்னொரு பக்கம் என்னோட ஆர்வம். அதுக்கு அப்புறம் உன் கதை. ஒரு புது ஹீரோயினுக்கு இது போல ஒரு கதை அதுவும் அவள சுத்தி நடக்குறாப்போல கிடைக்குறது ரொம்பவே கஷ்டம். அதை இழக்க நான் விரும்பலை. ஆனா உங்க ப்ரொடியூசர் பண்ற டார்சர் தாங்க முடியலை. டெய்லி ராத்திரி சரக்கப் போட்டுட்டு அவரு பேசுறத காதால கேட்க முடியலை. என் சித்தியும் விடாம அவரை ஹோல்ட் பண்ணிட்டேயிருக்கா. எனக்காக ஒரு ஹெல்ப் பண்ணுவியா?” என்று கேட்டவளை நிமிர்ந்து பார்த்தான் ஸ்ரீதர்.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 19 - https://bit.ly/2N1J3lW

பகுதி 18 - https://bit.ly/2MkvvFd

பகுதி 17 - https://bit.ly/2OIQjVo

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close