சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 21 : உங்கள் உள்ளுணர்வு என்ன சொல்லுது?

ஆர்.கே.நாராயண்
ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் லேட்டஸ்ட் வகை மிக்ஸி ஒன்று வாங்கி வந்தார். எந்தப் பல்கலைக்கழகம் என்று கேட்கிறீர்களா? பாரதியார் பல்கலை என்று வைத்துக் கொள்ளுங்களேன். அய்யய்யோ அதுவா என்று கேட்கத்தோன்றுகிறதா? சரி வேண்டாம். உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் என்று வைத்துக்கொள்ளுங்கள். பல்கலைக்கழகத்தின் பெயர் முக்கியமல்ல. அந்த மிக்ஸிதான் முக்கியம். பல்கலைக்கழகங்கள் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். எந்தப் பல்கலைக்கழகத்துக்கும் ஒரு மேதையை அறிந்துகொள்ளும் அருகதை இருந்ததில்லை.