'24' சலனங்களின் எண்: பகுதி 15 - ஸ்ரீதர் v/s அருண்

ப்ரசாத்தின் மேனேஜர் அருணை, ஸ்ரீதருக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. அவனால் ஏதோ ஒரு வில்லங்கம் வரப்போகிறது என்று பட்சி சொல்லிக் கொண்டேயிருந்தது. ஹீரோக்களினால் வாய்ப்பு பறி போன பல புது இயக்குனர்களின் வாழ்க்கையை பார்த்திருக்கிறான்.