கதைகள் விதைகள்! 15: விதி, மதி, கதி... நிதி!

தவம் செய்த வித்யாரண்யர் மஹாலக்ஷ்மியிடம் செல்வ வரம் பெற்று, பின் தந்திரமாக சந்நியாசியாக மறுஜென்மமும் கண்டு, வரத்திற்கான நிதியைப் பெற்றுவிட்டார்.
நிதி கிடைத்துவிட்டது. ஆனால் ஒரு சந்நியாசியாக அதை அவர் தொடக்கூடாது. தனக்கென பயன்படுத்தவும் கூடாது. சுருக்கமாய் சொல்வதென்றால், அவர் தவத்தால் விளைந்த நிதியால் அவருக்கு ஒரு பயனுமில்லை. இதற்காகவா அவர் இத்தனை பாடுபட்டார்?