தொங்கட்டான் 12: ‘காளியாத்தாவுக்கு வேல் வேல்?’

அன்று வெள்ளிக் கிழமை. காளி புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தாள். பத்து மேளக்காரர்கள்... பத்து நாதஸ்வர வித்வான்கள் ராக ஆலாபனையில் அந்த மண்டபத்தையே மயக்கிக்கொண்டிருந்தார்கள்.
வாசலில் கொம்பு முழக்கம் எக்காள முழக்கம் விண்ணைத் தொட்டன. ஊர் மக்கள் எல்லாம் பக்திப் பரவச உணர்வில் இருந்தார்கள்.