[X] Close

'24' சலனங்களின் எண்: பகுதி 38 – சுரேந்தர், பிரேமி


24-cable-sankar-series-salanangalin-en

  • கேபிள் சங்கர்
  • Posted: 04 Jan, 2019 12:20 pm
  • அ+ அ-

எது நடக்கிறதோ இல்லையோ, தினமும் ஷூட்டிங் முடிந்தவுடன் சுரேந்தர் வண்டியனுப்பி, தன் இடத்துக்கு ஸ்ரீதரை அழைத்து விடுவான். அன்றைய தினம் நடந்த ஷூட்டிங் பற்றி புரிந்தும் புரியாததுமாய் அவனது அல்லக்கைகள் என்ன சொன்னார்களோ? அதை அவர்களை விட இன்னும் புரிந்தவானாய் மொக்கை கேள்விகள் கேட்டு, எப்படி? என்பது போல நான்கைந்து முறை அனைவரையும் திரும்பிப் பார்த்துக் கொள்வான்.

அவர்களும் அதற்காகவே காத்திருந்தது போல, “அதான தலைவர் கிட்ட முடியுமா?”என்று கோரஸாய் சொல்லிவிட்டால் போதும் அமைதியாகிவிடுவான். ஆனால் இன்றைக்கு அப்படி நடக்காதென்று ஸ்ரீதருக்கு தெரியும் என்பதால் தயாராகவே இருந்தான்.

வழக்கம் போல சரக்கும், அல்லக்கைகளுடன் சுரேந்தர் விஸ்தாரமாய் அமர்ந்திருந்தான். ஸ்ரீதர் உள்ளே நுழைந்ததும் அதீத அமைதி அங்கே சூழ்ந்தது. சுரேந்தர் கூட ஏதும் பேசாமல் ஸ்ரீதரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் அமைதி ஸ்ரீதருக்கு கொஞ்சம் பயத்தை கொடுத்தது. தொண்டையை கனைத்துக் கொண்டு “இன்னைக்கு ஷூட்ல ஒரு சின்ன பிரச்சனை” என்று ஆரம்பித்தான்.

“எது சின்ன பிரச்சனை? அரை மணி நேரம் முன்னாடி ஷூட்டிங் நிறுத்திட்டு போனதா? யார் வூட்டு காசு? நான் அங்க டாலர்ல சம்பாதிக்க எவன் ….. எல்லாம் உருவி வுட்டு சம்பாரிச்சு வர்றதை நீ இங்க மயிராச்சுன்னு விடுவியா? என் காசை நான் வேணாம்னா நான் தான் சாக்கடையில போடுவேன். நீ யாரு போடுறதுக்கு?” என்ற சுரேந்தரின் குரலில் கோபம் கொப்பளித்தது.

“இல்லை சார்.. கேமராமேனுக்கும் ..” என்று சொல்ல இழுத்த போதே மாஸ்டர் கதவை திறந்து கொண்டு நுழைய, அவரைப் பார்த்து “வாங்க மாஸ்டர் நீங்களே சொல்லுங்க. என்ன பிரச்சனைனு” என்று அவரை தன் பக்கம் பேச இழுத்தான். ஏற்கனவே அவருக்கும் கேமராமேனுக்கு பிரச்சனை தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதால், நிச்சயம் தன் பக்கம் சப்போர்ட்டுக்கு வருவார் என்று நம்பினான்.

“சார்.. டைரக்டர் மேல ஏதும் தப்பில்லை. அந்த..கேமராமேன் தான் எல்லாத்துக்கும் காரணம். பேக்கப் கூட நான் தான் டைரக்டர் கிட்ட சொல்லி சொல்லச் சொன்னேன். டார்சர் பண்றான் சார். மொத்தமாய் நம்ம மோடிவேஷனையே குலைக்கிறான்.”

சுரேந்தர் அவரையே பார்த்தார். சுரேந்தரின் முந்தைய படங்கள் அத்தனைக்கும் அவர் தான் மாஸ்டர். மிகவும் ஒழுக்கமானவர். முகத்திற்கு முன்னே சட்சட்டென கருத்தை சொல்லிவிடுகிறவர் என்பதால் அவர் மீது சுரேந்தருக்கு மரியாதை உண்டு.  அமைதியாய் அவர் சொல்வதை பார்த்துக் கொண்டிருந்தார்.

“தபாரு தம்பி.. நீ சொன்னேன்னுதான் அவனைப் போட்டோம். அப்புறம் பிரச்சனைன்னு சொன்ன போது நான் உனக்குத்தான் சப்போர்ட் பண்ணேன். என் சப்போர்ட்ட வச்சி நீதான் இந்த மாதிரி பிரச்சனைகளை எல்லாம் டேக்கிள் பண்ணணும் என்ன புரியுதா? டேய்.. அந்த கேமராமேனை கூப்பிடு” என்று சொல்லிவிட்டு டீப்பாயின் மேலிருந்த சரக்கை ஒரு மடக்கு சட்டென எடுத்து குடித்தார்.

“அப்புறம் உனக்கொரு விஷயம் சொல்லணும். ப்ரேமிய இன்னைக்கு வர்ற சொல்லியிருக்கேன்” என்று கெக்களித்தார். சுற்றும் இருந்த கூட்டம் “ஆஹா” என்றது படு ஆபாசமாய் இருந்தது. எல்லாரும் இளித்தார்கள்.

அத்தனை பேர் கண்களிலும் ஒர் பளபளப்பு கூடி, மனசினுள் ப்ரேமியை உரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் போல இருந்தது. சுரேந்தருக்கு ஒரு கால் வந்தது.

“அலோ.. நல்லா போட்டிருக்கு.  எல்லாம் ஷூப்பரு.. அவுட்டோர் ஷூட்டிங் வந்தாச்சு இல்லை. இன்னைக்கு போட்டுருவேன். “ என்று மீண்டும் ஆபாசமாய் அனைவரையும் ஒரு பார்வை பார்த்தபடி சிரித்தார்.

என்ன மாதிரியான மனிதன் இவன்? ஒரு பெண்ணை புணரப் போகிறேன் என்று ஊர் முழுக்க சொல்லிவிட்டு புணர்வது என்ன விதமான வக்கிரம்?. தோ பார்.. நான் இந்த சின்னப் பெண்ணை என் அதிகாரத்தை வைத்து அடிபணியை சொல்லி புணரப் போகிறேன். என் ஆண்மையைப் பாரு.. என் அதிகாரத்தைப் பார்.. பார்.. பார்.. பார்.. என இன்னும் நான்கு பேரை ஆவரவர் அதிகாரத்தை பயன்படுத்த தூண்டும் வக்கிரம். தைரியமில்லாதவனைக் கூட தைரியப்படுத்துகிற விஷயம். 

இது தெரிந்து அப்பெண்ணை பொது வெளியில் பார்க்கிறவர்கள் எப்படி பார்ப்பார்கள்? புரிந்தும், தெரிந்தும் தான் அவள் ஒத்துக் கொள்கிறாள் என்றாலும் அவளுக்கென்று மனசும்,  சுயகவுரவமும்  இருக்கும் என்று புரியாமலா இருப்பார்கள்?. 

“அவ அஸ்ஜீஸ்மெண்ட் பார்ட்டி.. “

“பேசிக்கலாம் சார். ஒத்துவரும்”

“ப்ரோடியூசர். ஹீரோ. டைரக்டர் மூணு பேரு மட்டும்தான் மேடம். ஓக்கேன்னா உடனே அக்ரிமெண்ட் போட்றலாம்”

ஸ்ரீதர் முன் கையில் ஒரு க்ளாஸ் விஸ்கியை சுரேந்தர் நீட்டிக் கொண்டிருந்தார். “நாளைக்கு ஷூட்டிங் இருக்குச்சார்.” குடிக்க ஆர்மபித்தால் அதை வைத்து பேச ஆரம்பித்து விடியற்காலை ஆக்கிவிடுவார் சுரேந்தர் என்பதால் தயங்கினான் ஸ்ரீதர்.

“நீயே நினைச்சாலும் லேட்டாத்தான் ஆவும். நான் அவளை அனுப்பினாத்தானே நீ ஷூட் பண்ணுவ?” என்று இடுப்பின் முன் தன் கை விரல்களை துப்பாக்கியாய் அவதானித்து, முன் பின் தள்ளி சிரித்தார்.  மடக், மடக்கென ரெண்டு லார்ஜை எடுத்து குடித்தார். ரொம்பவும் எக்ஸைட்டாக இருந்தார். கதவை திறந்து உள்ளே வந்த வின்செண்ட், ஸ்ரீதர், மாஸ்டர் எல்லாம் இருப்பதைப் பார்த்து லேசாய் ஜெர்க் ஆனான்.

“வாங்க.. கேமராஆஆஆமேன். “ என்று சுரேந்தர் நல்ல போதையில் அழைத்தார். மொத்த அறையும் அமைதியாய் என்ன சொல்லப் போகிறார் என்று அவரையே பார்த்துக் கொண்டிருக்க,

“தம்பி.. ஒழுங்கு மரியாதையா வேலை பாக்குறதா இருந்தா பாரு. இல்லாட்டி.. நைட்டே டிக்கெட் போட்டுர்றேன். என்ன ?” என்றார் குழறலோடு கத்தினார்.

இதை வின்செண்ட் எதிர்பார்க்கவில்லை. அதுவும் இத்தனைப் பேர் முன்னால் வைத்து ரொம்பவும் சங்கடமாய் உணர்ந்தான். மாஸ்டர் முகத்தில் சிரிப்பு லேசாய் பூத்து வெளியில் தெரிந்து விடப் போகிறதே என்று அடக்கிக் கொண்டு ரியாக்‌ஷன் மாற்றிக் கொண்டு சுரேந்தரையும், வின்செண்டையும் மாறி, மாறி பார்த்துக் கொண்டிருந்தார். வின்செண்ட் நின்று கொண்டேயிருந்து ஸ்ரீதருக்கு உறுத்தலாய் இருக்க, அல்லகைகளைப் பார்த்து “சாருக்கு ஒரு சேர் போடுங்க’ என்றான்.

“ஆமா.. சேர். போடு.. சேர். போடு.. சார்னால பத்துகோடி ரூபாய் லாபம் நமக்கு.. சேர் போடு..” என்று கிண்டலாய் சுரேந்தர் சொல்ல, போட்ட சேரில் உட்காருவதா வேண்டாமா? என்கிற குழப்பத்துடன் பார்க்க, ஸ்ரீதர் “உட்காரு” என்று அழுத்தமாய் சொல்ல, பாதி இடத்தில் உட்கார்ந்தான்.

“டைரக்டர் சொல்லுறத, மாஸ்டர் சொல்லுறத கேட்டு வேலை செய்யுறதா இருந்தா செய். இல்லாட்டி என் ஷூட்டிங்க பேக்கப் பண்ணி லாஸ் பண்ணேனு ப்ரொடியூசர் கவுன்சில், உன் கவுன்சில் எல்லாத்துலேயும் கம்ப்ளெயிண்ட்  பண்ணி நாரடிச்சிருவேன். புரியுதா? இத்தனைக்கும் இதப் பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ண வேண்டிய டைரக்டர் ஒரு வார்த்தை உன்னைப்பத்தி பேசலை. என்ன புரியுதா?”  என்று கேட்க, சுரேந்தர், ஸ்ரீதர், மாஸ்டர் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தபடி தலையாட்டினான் வின்செண்ட்.

“ஓகே.. டன்.. என்ன சரக்கடிக்கிறியா?” என கேட்டபடி ‘நம்ம ஒளிப்பதிவு தம்பிக்கு ஒரு க்ளாஸ் ஊத்து” என்றார்.

“இல்லைங்க நான் சாப்பிடறது இல்லை.’ என்ற ஊற்றுவதை தவிர்த்தான். “தம்பி இன்னைக்கு நம்ம ப்ரேமியை போடுறேன்” என்று அவனிடம் சொல்லி சிரிக்க ஆரம்பித்த சுரேந்தரைப் பார்த்து எப்படி ரியாக்ட் ஆவது என்று தெரியாமல், மையமாய் பார்க்க.. மணி பதினொன்னு ஆகியிருந்தது.  ஸ்ரீதரின் வாட்ஸப்பில் டிங் டிங் என மெசேஜுகள் வந்த வண்ணம் இருக்க, “என்ன?” என்பது போல பார்த்தார் சுரேந்தர்.

“நாளைக்கு ஷுட் ப்ளானிங் டீம் சாடிங் சார்.”

“அமாமா நீங்க வேலையப் பாருங்க.. நானும் வேலையப் பாருங்க. எல்லாரும் கிளம்புங்க” என்று சொல்லிவிட்டு, எல்லாரும் இருக்கும் போதே தன் உடைகளை களைந்து வெறும் ஜட்டியோடு, துண்டைக் கட்டிக்  உட்கார்ந்தான். இனி இங்கிருப்பது சரியில்லை என்று அனைவரும் கிளம்பி அறையை விட்டு வெளியே வந்தவுடன் ஸ்ரீதர் வின்செண்டிடம் “காலையில சீக்கிரம் அசெம்பிள் ஆயிருவோம் என்ன?:” என்று மாஸ்டரைப் பார்த்தும் சொல்ல, மாஸ்டரும், வின்செண்டும் தலையாட்டினார்கள். 

அவர்களை அனுப்பிவிட்டு, தன் காரை எடுக்கச் சொல்லி, அமர்ந்தவுடன் போனை எடுத்து பார்த்தான் அத்தனை மெசேஜுகளும் ப்ரேமியிடமிருந்து வந்திருந்தது.

- தொடரும்

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க

பகுதி 37 - https://bit.ly/2AqAAog

பகுதி 36 - https://bit.ly/2ESTnfd

பகுதி 35 - https://bit.ly/2BDZgJH

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close