[X] Close

கூகுள் செயற்கை நுண்ணறிவு குரலுக்கு 4.5 லட்சம் திருமண விண்ணப்பங்கள்


google-assistant-ok-google-marriage-proposal

கூகுள் அசிஸ்டண்டை அறிமுகம் செய்யு சுந்தர் பிச்சை | கோப்புப் படம்: ஏபி

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 10 Apr, 2018 18:33 pm
  • அ+ அ-

கூகுளின் செயற்கை நுண்ணறிவு குரலான ஓகே கூகுளுக்கு இந்தியாவிலிருந்து 4.5 லட்சம் திருமண விண்ணப்பம் வந்துள்ளது.

குரல் அடிப்படையில் இயங்கும் செயற்கை நுண்ணறிவு உதவி செயலியான கூகுள் அசிஸ்டண்ட் கடந்த வருடம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, நமது குரலை புரிந்து கொண்டு இயங்கும் செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஆகிய இரண்டு ஸ்பீக்கர்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

இதை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் ரிஷி சந்திரா பேசுகையில், "இந்தியாவில் கூகுள் அசிஸ்டண்ட் தற்போது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இயங்கும். தொடர்ந்து இங்கு அதன் பயனர்கள் அதிகரித்து வருகின்றனர். கூகுள் அசிஸ்டண்ட்டுக்கு இந்தியாவிலிருந்து 4.5 லட்சம் திருமண விண்ணப்பங்கள் வந்துள்ளன. கணிணிகளை இயக்க குரல் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கூகுள் அசிஸ்டண்ட் வெறும் தேடியந்திரமாக மட்டும் இல்லாம நாம் சொல்வதன் கருத்துருவையும்/சூழலையும் புரிந்துகொள்ளும்" என்று கூறினார். 


கூகுள் ஹோம் ஸ்பீக்கர் | கோப்புப் படம்: நியூயார்க் டைம்ஸ்

சர்வதேச அளவில், 119 மொழிகளில், 100 கோடிக்கும் அதிகமான மக்கள் குரல் ஆணை/உள்ளீட்டு வசதியை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவிலும் குரல் ஆணை வசதியை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. டைப் அடிப்பதை விட குரலில் ஆணைகள் தருவதை பயனர்கள் அதிகமாக விரும்புகின்றனர் என்கிறது கூகுள். 

கூகுள் ஹோம் ஸ்பீக்கரின் விலை ரூ. 9,999 என்றும், ஹோம் மினி ஸ்பீக்கரின் விலை ரூ. 4,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு ஆங்கில மொழியை மட்டுமே புரிந்து கொள்ளும் இந்த ஸ்பீக்கர்களில், இந்தி மொழியை புரிந்து கொள்ளும் வசதி இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்படும். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close