[X] Close

பிரதமராக யார் வர வேண்டும்? - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்


pondichery-cm-about-pm-candidate

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 12:50 pm
  • அ+ அ-

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார். எனினும், யார் பிரதமராக வர வேண்டுமென்பதை மக்கள்தான் முடிவு செய்வர் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கூறினார்.

கோவையில் செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது:

அண்மையில் முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜக வுக்கான எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளன. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸுக்கு வெற்றியைத் தந்துள்ளன. மத்தி யில் ஆட்சியமைத்து நாலரை ஆண்டுகளாகியும், பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதி களில் ஒன்றைக் கூட நிறை வேற்றவில்லை. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

விவசாய விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பாஜக, தற் போது விவசாயிகளை ஏமாற்றிவிட் டது. மோசமான தொழிற் கொள்கைகளாலும், வெளிநாட்டு மூலதனம் கிடைக்காமலும் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன.

167 பேர் இறந்ததுதான் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் பலன். ஜிஎஸ்டியால் சிறு, குறு, நடுத்தரத் தொழிற்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வென்று, ஆட்சியைக் கைப்பற்றும். ரபேல் விமான ஒப்பந்தத்தில் பல்லாயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்க மறுக்கிறார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் வேட் பாளராக முன்னிறுத்தப்படுகிறார். அவர் பிரதமராக வர வேண்டுமென எனக்கும் விருப்பம் உள்ளது. எனினும், யார் பிரதமராக வர வேண்டுமென்பதை மக்கள்தான் முடிவு செய்வர்.

புதுச்சேரியில் மாநில சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் நான் செயல்படுகிறேன். மாநில உரிமைகளை மீறும் துணை நிலை ஆளுநரைக் கண்டித்தும், அவர் பதவி விலகக் கோரியும் 21 கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் ஆர்ப்பாட்டம் புதுச்சேரியில் ஜனவரி 4 -ம் தேதி நடைபெறுகிறது.

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் ஊழல்வாதி என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்து தொடர்பாக, பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.மத்தியில் பாஜக ஆட்சியமைத்து நாலரை ஆண்டுகளாகியும், வெளி நாடுகளில் பதுக்கி வைக் கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்பது, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close