[X] Close

ஹாட்லீக்ஸ் : எம்பியின் சேவை சின்னம்மாவுக்குத் தேவை!


hot-leaks-sasikala

சசிகலா

  • kamadenu
  • Posted: 18 Nov, 2018 12:44 pm
  • அ+ அ-

கொங்குமண்டல அதிமுக எம்பி ஒருவர் தொகுதிப்பக்கம் வருவதைக்கூட ரெண்டாம் பட்சமாக வைத்துவிட்டு பெங்களூருவிலேயே தவம் கிடக்கிறாராம். 

தனது ‘ பவரை’ பயன்படுத்தி, சிறையிலிருக்கும் சின்னம்மாவுக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்கவே அவர் பெங்களூருவாசம் செய்வதாகச் சொல்கிறார்கள். 

இதனால், தொகுதிப்பக்கம் வந்தாலும் ‘நம்மையும் அந்த லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்களோ’ என்ற பயத்தில் இவரைச் சந்திக்க தயங்கும் கட்சிக்காரர்கள், “இன்னொரு முறை இதே தொகுதியில் இவரு நின்னா டெபாசிட்கூட மிஞ்சாது. அது தெரிஞ்சுதான் நாங்க இந்தத் தொகுதியை இப்பவே கூட்டணிக் கட்சிக்கு ரிசர்வ் பண்ணி வெச்சுட்டோம்” என்று கிண்டலடிக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close