[X] Close

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் திமுகவுக்குத்தான் இருக்கிறது!- திருமாவளவன்


thirumavalavan-on-dmk-alliance

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Nov, 2018 16:18 pm
  • அ+ அ-

கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் திமுகவுக்குத்தான் இருக்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார். 

தனியார் தொலைக்காட்சிக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், "நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 20 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்திருப்பது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வருமா என்பது தெரியவில்லை.

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு மட்டும் வரலாம். ஒருவேளை வந்தால் நாங்கள் அதில் போட்டியிட மாட்டோம். மற்றபடி திமுக மற்றும் ஆதரவுக் கட்சிகளுக்கு தோள் கொடுப்போம். நாடாளுமன்றத் தேர்தல்தான் எங்களது இலக்கு. 

திமுக கூட்டணியில் விசிக இருக்கிறதா என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் உரிமை திமுகவுக்குத்தான் இருக்கிறது" என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close