[X] Close

திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடிக்கச்  சொன்ன ஆபத்தான கட்சி விசிக: தமிழிசை தாக்கு


tamilisai-slams-thirumavalavan

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Nov, 2018 11:01 am
  • அ+ அ-

திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடிக்கச்  சொன்ன ஆபத்தான கட்சி விசிக என்று  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை கடுமையாக சாடியிருக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்.

முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் பத்து பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் அந்த ஒருவர் தான் பலசாலி என பிரதமர் மோடி பலசாலி எனும் விதத்தில் கருத்து கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசுகையில், "பாம்பை கண்டு படையே நடுங்கும் என்பதால் பாம்பு பலசாலியல்ல படையே நடுங்கும். அந்த அளவிற்கு பாம்பு நஞ்சானது, தீங்கானது; ஆபத்தானது என்றே பொருள் படும். விஷம் கொண்ட பாம்பைப்போல்தான் பாஜகவை பார்க்கிறோம்" என்று விளக்கமளித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், "பாஜக ஆபத்தானகட்சியா? என ஆராய்ச்சி செய்யும் விசிக தலைவர் தன் கட்சியின் கடந்த காலத்தை மீண்டும் சுயபரிசோதனை செய்ய வேண்டும். முந்தைய கூட்டணிகளில் இவர்களை சேர்த்துக்கொண்டால் நாம் தோற்றுவிடுவோம் எனப் பயந்த கட்சி உங்கள் கட்சி? திருந்தி படி என்று சொல்லாமல் திருப்பி அடிக்கச்  சொன்ன ஆபத்தான கட்சி?" என காட்டமாக பதிவு செய்துள்ளார்.

அடங்க மறு, அத்துமீறு, திருப்பி அடி என்பது ஆணவப்போக்கினை எதிர்க்கும் திருமாவளவனின் முழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close