[X] Close

அம்மாவுக்காக கொதித்தவர்கள் அண்ணாவுக்காக வரமாட்டார்களா?- அருணன்


arunan-slams-admk

  • பாரதி ஆனந்த்
  • Posted: 12 Nov, 2018 15:22 pm
  • அ+ அ-

அம்மாவுக்காக கொதித்தவர்கள் அண்ணாவுக்காக வரமாட்டார்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் எழுத்தாளருமான அருணன்.

அண்மையில் வெளியான சர்கார் திரைப்படத்தில் வில்லி பெயருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் கோமளவல்லி என்று பெயர் சூட்டியதற்கும் அதிமுகவின் இலவச மிக்ஸி, க்ரைண்டர் திட்டத்தை கிண்டல் செய்ததற்கும் அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து படத்திலிருந்து சர்ச்சைக் காட்சிகள் நீக்கப்பட்டன. இந்நிலையில்,  அழகப்பா பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து அண்ணாவின் நாடகம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை சுட்டிக்காட்டியுள்ள பேராசிரிய அருணன், தனது ட்விட்டரில், "அண்ணாவின் நாடகமாகிய "நீதிதேவன் மயக்கம்" அழகப்பா பல்கலைக்கழக பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. அண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் படைப்பிற்கு ஆபத்து! சர்காரிரல் அம்மாவை கேவலப்படுத்தி விட்டார்கள் என்று கொதித்தெழுந்த அமைச்சர்கள் எல்லாம் எங்கே...எங்கே..?" எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close