[X] Close

ஹாட்லீக்ஸ் : மீ டூ; அமைச்சர் நியமனம் அம்புட்டுத்தான்!


hot-leaks-bjp

  • kamadenu
  • Posted: 11 Nov, 2018 09:28 am
  • அ+ அ-

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த எம்.ஜே.அக்பர் ‘மீ டூ’ விவகாரத்தில் சிக்கி அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இவரது இடத்தையும் சேர்த்து மத்திய அமைச்சரவையில் மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. 

அந்த இடங்களுக்குப் புதியவர்களை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் பாஜக-வுக்குள் பலமாக எதிரொலிக்கின்றன.

 ஆனால், அப்படி நியமனம் செய்தால் கூட்டணிக் கட்சிகளின் மனஸ்தாபங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதோடு, சொந்தக் கட்சிக்குள்ளும் குஸ்தி கட்டுவார்கள் என்பதால் மவுனம் காக்கிறாராம் பிரதமர் மோடி.

 அநேகமாக நடப்பு நாடாளுமன்றத்தின் எஞ்சிய பதவிக் காலத்துக்கும் புதிய அமைச்சர்கள் நியமனம் இருக்காது என்கிறார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close